மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப கேட்ட விவசாயி.. அடித்தே கொன்ற தாளாளர்!

Farmer Beaten to Death | மும்பையில் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்க நினைத்த விவசாயி தந்தை, பள்ளி நிர்வாகத்திடம் தான் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப தருமாறு கோரியுள்ளார். இதனால் பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி இணைந்து விவசாயியை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப கேட்ட விவசாயி.. அடித்தே கொன்ற தாளாளர்!

கொலை செய்யப்பட்ட விவசாயி, பள்ளி தாளாளர் மற்றும் அவரது மனைவி

Updated On: 

12 Jul 2025 07:18 AM

மும்பை, ஜூலை 12 : மும்பையில் (Mumbai) விவசாயி ஒருவரை பள்ளி தாளாளரும் அவரது மனைவியும் இணைந்து அடித்தே கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்க நினைத்த விவசாயி, தான் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப தருமாறு கேட்ட நிலையில் பள்ளி தாளாளரும், அவரது மனைவியும் இணைந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தனியார் பள்ளியில் மகளுக்கு செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கேட்டதால் விவசாயி அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப தரும்படி கோரிய விவசாயி

மராட்டிய மாநிலம், பர்பானி மாவட்டம், பூர்ணா பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெகநாத். இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவரது மகள் அந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், அவரை வேறு பள்ளியில் படிக்க வைக்க ஜகநாத் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கு சென்ற அவர், மகளை வேறு பள்ளியில் சேர்க்க உள்ளதாகவும் தனது மகளுக்காக ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தரும்படியும், மகளின் சான்றிதழ்களை திருப்பித் தரும்படியும் பள்ளி தாளாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி தாளரும் அவரது மனைவியும் இணைந்து செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தர முடியாது என்றும் ஜெகநாத்தின் மகள் இன்னும் சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : முடி வெட்டலையா? கேள்வி கேட்ட பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் கொலை செய்த மாணவர்கள்!

அடித்தே கொலை செய்த பள்ளி தாளாளார் மற்றும் அவரது மனைவி

இந்த நிலையில் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் பள்ளி தாளாளரும் அவரது மனைவியும் இணைந்து ஜெகநாத்தை பள்ளியில் வைத்து மிக கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஜெகநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் பள்ளி கட்டணத்தை திரும்ப கேட்க சென்ற விவசாயியை பள்ளி தாளாளரும், அவரது மனைவியும் இணைந்து அடித்தே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.