சத்தீஸ்கரில் கடும் வெள்ளம்.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. சொந்த ஊருக்கு சென்றபோது சோகம்!

Chhattisgarh Flood : சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சத்தீஸ்கருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல்கள் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சத்தீஸ்கரில் கடும் வெள்ளம்.. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. சொந்த ஊருக்கு சென்றபோது சோகம்!

உயிரிழந்த குடும்பம்

Updated On: 

28 Aug 2025 10:14 AM

சத்தீஸ்கர், ஆகஸ்ட் 28 : சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. திருப்பத்தூரைச் சேர்ந்த குடும்பம் காரில் சென்றபோது, வெள்ளத்தில் (Chhattisgarh Heavy Rain) அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இவரது உடல்களை ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.  வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாநிலங்களில் வெள்ளம் , நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால்,  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்க தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதல், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீரில் மூழ்கி உள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஸ்கரில் 4 பேர் உயிரிழந்தனர்.  திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). இவர் சிவில் என்ஜினியரான ராஜேஷ் குமார், பல ஆண்டுகளாக ராய்ப்பூரில் வசித்து வந்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

Also Read : கூகுள் மேப்பால் விபரீதம்.. ஆற்றில் பாய்ந்த வேன்.. 4 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

2025 ஆகஸ்ட் 25ஆம் தேதியான நேற்று ராஜேஷ்குமார் தனது மனைவி மற்றும இரண்டு பெண் மகள்களுடன் சொந்த ஊருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். பஸ்தார் மற்றும் சுக்மா மாவட்டம் வழியாக தமிழகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பலத்த மழையும் பெய்து கொண்டிருந்தது. அப்போது, ராஜேஷ்குமார் ஓடிச் சென்ற கார் வெள்ளத்தில் சிக்கியது. கங்கர் பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. உடனே இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read : நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 12 பேர் பலி.. மும்பையில் அதிர்ச்சி!

மீட்பு படையினர் உடனே வந்தாலும், வெள்ளம் கடுமையாக இருந்ததால், மீட்பு பணிகள் தாமதமாகவே தொடங்க முடிந்தது. அப்போது, 4 பேரின் உடல்களையும் மீட்பு குழுக்கள் மீட்டனர். ராஜேஷ் குமார் (43), அவரது மனைவி பவித்ரா (40), அவர்களது இரண்டு மகள்கள் சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) ஆகியோர் உயிரிழந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது  சடலங்கள் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட உள்ளது.