Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனுமன் சிலையை 36 மணி நேரம் சுற்றி வந்த நாய்….என்ன காரணம்…வீடியோ வைரல்!

Dog Circles Hanuman Statue: உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமன் சிலையை நாய் ஒன்று 36 மணி நேரமாக சுற்றி வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அனுமன் சிலையை 36 மணி நேரம் சுற்றி வந்த நாய்….என்ன காரணம்…வீடியோ வைரல்!
அனுமன் சிலையை 36 மணி நேரம் சுற்றி வந்த நாய்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Jan 2026 11:13 AM IST

உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டம், நாகினாவில் பழமையான கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அனுமன் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை ஒரு நாய் தொடர்ந்து சுற்றி வரும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நாயானது, 36 மணி நேரமாக அந்த சிலையை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இதனை காண்பதற்காக அந்த கோவில் முன்பு அதிக அளவில் கூடினர். அந்த வீடியோவில், பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், அனுமன் சிலையை நாய் சுற்றி வருவது ஒரு தெய்வீக நிகழ்வு எனவும், அறிய நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பு, இது அற்புதமும் அல்ல, அதிசயமும் அல்ல. மக்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும். இது 1825 ஆம் ஆண்டு கிடையாது 2025. அனுமன் சிலையை சுற்றி வரும் இந்த நாயானது நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

நாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு

மேலும், ஒரு வேளை நாய்க்கடி, வெறிநோய் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, அந்த நாயின் மூலம் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நாயே பத்திரமாக அங்கிருந்து மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதே போல, மற்றொரு நபர் பதிவு செய்த பதிவில், இதனால் தான் மக்களுக்கு கல்வி அவசியம் ஆகும். நாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது ரேபிஸ் தாக்குதல் இருந்தாலோ இது பொது மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: நாய் கடித்து 10 வயது சிறுமி பரிதாப பலி.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

நாயின் அருகே செல்லக் கூடாது

எனவே, இந்த விஷயத்தை கவனமுடன் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மூளை கட்டி அல்லது தொற்று போன்ற நிலைமையில் மூளையின் ஒரு பக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், நாயை ஒரு திசையில் நகர்த்த கட்டாயப்படுத்த கூடாது. உள் காது பிரச்சனைகள் சமநிலையையும் பாதித்து, நாய் வட்டங்களின் நகரச் செய்யலாம் என்றும், ஒரு நாய் இப்படி நடந்து கொண்டால் அதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாரும் அருகில் செல்லவோ, தொடர்வோ கூடாது.

அனுமன் சிலையை நாய் சுற்றி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Pop Culture Opinions (@popinions.in)

மூட நம்பிக்கையான செயல்

உடனடியாக கால்நடை மருத்துவர்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதனை அகற்ற வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தால் நன்மை கிடைக்கும என்று நம்பி சிலர் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். பலர் இது ஒரு மூடத்தனமான, முட்டாள் தனமான செயல் என்று எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: குடியரசு தின நிகழ்ச்சி…போர் விமானங்கள் மீது பறவைகள் மோதுவதை தடுக்க 1,275 கிலோ கோழி இறைச்சி வீசும் நிகழ்வு!