Delhi Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டு விபத்து.. இன்று ஒரு நாள் சாந்தினி சௌக் சந்தை மூடப்படும் என அறிவிப்பு..

Chandhini Chowk Closed: சாந்தினி சௌக் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகும். தினமும் 400,000 முதல் 600,000 பேர் இங்கு வருகை தருகின்றனர், இந்த நிலையில் சாந்தினி சௌக் அருகே நேற்று நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்று ஒரு நாள் முழு சந்தையும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டு விபத்து.. இன்று ஒரு நாள் சாந்தினி சௌக் சந்தை மூடப்படும் என அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

11 Nov 2025 06:52 AM

 IST

டெல்லி, நவம்பர் 11, 2025: செங்கோட்டை அருகே ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர், 24 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் இன்று (நவம்பர் 11, 2025) சாந்தினி சௌக் சந்தை மூடப்படும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். வெடிப்புக்குப் பிறகு வர்த்தகர்கள் அச்சத்தில் இருப்பதால், சாந்தினி சௌக்கில் உள்ள கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என்று சாந்தினி சௌக் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் பார்கவா தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அவரது கடை உள்ளது. வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அவரது கட்டிடம் முழுவதும் அதிர்ந்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல வர்த்தக சங்கங்கள் பரபரப்பான வணிகப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரின. தேசிய தலைநகரில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மேலும் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

மேலும் படிக்க: டெல்லி குண்டுவெடிப்பு கார் ஓனர் இவர்தான்.. விவரங்களை கண்டுபிடித்த போலீஸ்!

சாந்தினி சௌக் வரலாறு என்ன? ஏன் இது ஒரு முக்கிய இடம்?

சாந்தினி சௌக் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகும். தினமும் 400,000 முதல் 600,000 பேர் இங்கு வருகை தருகின்றனர், இது நாட்டின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக அமைகிறது. சாந்தினி சௌக் நாட்டின் மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றாகும், திருமண ஆடைகள், ஜவுளி, நகைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..

ஓமாக்ஸ் ரியல் எஸ்டேட்டின் அறிக்கையின்படி, சாந்தினி சௌக் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. அதாவது, ஒரு நாள் சந்தை மூடப்பட்டாலும், சுமார் ரூ.14,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. டெல்லியின் மற்றொரு முக்கிய சந்தையான சதார் பஜாரில் தினசரி பரிவர்த்தனை அளவு ரூ.300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சாந்தினி சௌக்கின் வருவாய், அதன் அளவு மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து.

சாந்தினி சௌக் சந்தை மூடல்:

இந்த நிலையில் சாந்தினி சௌக் அருகே நேற்று நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்று ஒரு நாள் முழு சந்தையும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று திங்கள்கிழமை என்பதாலும் கடைகள் மூடப்பட்டு இருந்ததாலும், மக்கள் எண்ணிக்கை மற்றும் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. பயங்கரவாதி உமரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பீகாரில் தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 7.6 லட்சம் இளம் வாக்காளர்கள்.. புதிய சாதனை படைக்க பிரதமர் வலியுறுத்தல்
Delhi Blast: டெல்லியில் நடந்தது தற்கொலை படை தாக்குதலா? புல்வாமா வரை சென்ற விசாரணை.. கைதான கார் உரிமையாளர் சொன்ன திடுக் தகவல்..
21 வயது மாடல் அழகி மர்ம மரணம்.. மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பி ஓடிய காதலன்!
Delhi Blast: நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..
டெல்லி குண்டுவெடிப்பு கார் ஓனர் இவர்தான்.. விவரங்களை கண்டுபிடித்த போலீஸ்!