தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
Constituency Delimitation: நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களில், மக்களவையின் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது மாநிலங்களில் 815 மக்களவை தொகுதிகளுக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகளுக்கு மிகாமலும் உருவாக்கப்பட உள்ளது.

கோப்புப் புகைப்படம்
மக்களவை தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இது தொடர்பாக 3 மசோதாக்களை மத்திய அரசு முன்மொழிந்து உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதைய அரசியலமைப்பின்படி மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்களுக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்கிறார்கள். அதாவது மொத்தம் 550-ல் 543 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 800-க்கும் மேல் உயர்த்த மத்திய பாஜக அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. இதை மனதில் கொண்டுதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 880 உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டன.
இதையும் படிக்க: பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?
பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம்:
இந்தநிலையில் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33 சதவீதம் ஆக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் அளிப்பதற்கு வசதியாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை முன்மொழிந்து உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்:
இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை முன்மொழிந்து உள்ளது. இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயர்வு:
இந்த மசோதாக்களில், மக்களவையின் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது மாநிலங்களில் 815 மக்களவை தொகுதிகளுக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகளுக்கு மிகாமலும் உருவாக்கப்பட உள்ளது. இந்த உயர்வு, மாநிலங்களின் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகைக்கு இடம் அளிப்பதையும், புதிய இடப்பங்கீட்டைச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. மேலும், அரசியலமைப்பின் பல்வேறு விதிகளில் ‘மக்கள்தொகை’ வரையறுக்கப்படும் விதத்தையும் மாற்றுகிறது. எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வழிவகை செய்கிறது.
இதையும் படிக்க: காரிலிருந்து இறங்கி வந்து ராகுல் காந்தியுடன் பேசிய பிரதமர் – வைரலாகும் வீடியோ
தொகுதி வரையறை ஆணையம்:
இது தவிர, தொகுதி வரையறைக்கான கட்டமைப்பையும் மாற்றி அமைக்கிறது. ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகும் தானாகவே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியதற்கு பதிலாக, சட்டத்தின் மூலம் தொகுதி வரையறைக்கு வழிவகை செய்து, அதனை “தொகுதி வரையறை ஆணையம்” செயல்படுத்தும் ஒரு புதிய முறைக்கு வழிவகை செய்கிறது. இந்த மாற்றங்கள், மாநிலங்களுக்கு இடையிலான இடப் பங்கீட்டில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.