ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. உடைந்தது மண்டை ஓடு… மருத்துவமனையில் சிகிச்சை!

Andhra Crime News : ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பள்ளி ஆசிரியர் டிபன் பாக்ஸால் பலமாக தாக்கியதில், அவருக்கு தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, பெங்களூருவில் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. உடைந்தது மண்டை ஓடு...  மருத்துவமனையில் சிகிச்சை!

சிறுமிக்கு தலையில் எலும்பு முறிவு

Updated On: 

18 Sep 2025 11:04 AM

 IST

ஆந்திரா, செப்டம்பர் 18 :  ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் டிபன் பாக்ஸால் தாக்கியதில் சிறுமியின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறும்புத்தனம் செய்ததால், ஆசிரியர் 6ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை ஆசிரியர் தாக்கி இருக்கிறார். இதில், சிறுமியில் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிறுமிக்கு பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் தாக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் டிபன் பாக்ஸால் தாக்கியதில் சிறுமியின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சித்தூர் மாவட்டம் புங்கனூரில் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி மற்றும் விஜேதாவின் தம்பதி. இந்த தம்பதிக்கு 11 வயதில் சாத்விகா நாகஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2025 செப்டம்பர் 10ஆம் தேதி சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது, வகுப்பில் குறும்புத்தனம் செய்துள்ளார். இதனால், கோபமடைந்த ஆசிரியர் பள்ளிப் பையால் அவரது தலைமையில் அடித்துள்ளார். அந்த பள்ளிப் பையல் டிபன் பாக்ஸ் இருந்துள்ளது. இதனால், சிறுமியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனை அடுத்து, சிறுமி அழுதுள்ளார்.

Also Read : கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?

ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

மேலும், சிறுமிக்கு மூன்று நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அவர் பள்ளிக்கும் செல்லவில்லை. இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் புங்கனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதற்கட்ட பரிசோதனை முடித்த மருத்துவர்கள், பெங்களூருவுக்கு அழைத்து செல்ல வேண்டும் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மண்டையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் சிறுமியின் மண்டை ஓடு உடைந்ததும், தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர்.

Also Read : பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!

இதனை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர். விசாரணையில் சிறுமியை அடித்தது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா என்று தெரியவந்துள்ளது. சிறுமின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பி.சுப்பா ராயுடு, சலீமா மற்றும் பள்ளி முதல்வர் ஏ.சுப்ரமணியம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.