புதிய கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவின் மகள் கவிதா!

Telangana Rasta Sena Party | தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அவர், இன்று தெலங்கானா ராஷ்ட்ர சேனா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

புதிய கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவின் மகள் கவிதா!

சந்திரசேகர ராவின் மகள் கவிதா

Updated On: 

25 Apr 2026 11:55 AM

 IST

ஐதராபாத், ஏப்ரல் 25 : தெலங்கானாவில் (Telangana) சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். பாரத ராஷ்டிர சமிதியில் (Bharat Rashtra Samithi) இருந்து நீக்கம் செய்யப்பட்ட அவர், தற்போது தெலங்கானா ராஷ்ட்ர சேனா (TRS – Telangana Rasta Sena ) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில்,  சந்திரசேகர ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய கட்சி தொடங்கிய சந்திரசேகர ராவின் மகள் கவிதா

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் தான் கவிதா. இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தில் தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்களான ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டினார். இதன் காரணமாக அவர், பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : விஜய்யுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது… தேசிய தலைவர் நிதின் நபீன்!

தெலங்கானா ஜக்ருதி கலாச்சார அமைப்பு மூலம் இயங்கிய கவிதா

கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கவிதா தனது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு தெலங்கானா ஜக்ருதி என்ற கலாச்சார அமைப்பை தொடங்கி, பொது பிரச்னைகளில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையே தான், தெலங்கானாவின் பிரச்னைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் இரண்டு அரசியல் கட்சிகளை தொடங்க உள்ளதாக கவிதா அறிவித்திருந்தார். அதுமட்டுமன்றி ஏப்ரல் 25, 2026 அன்று காலை 10 மணி அளவில் ஐதராபாத் அருகே உள்ள முனீர்பாத் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் கட்சி கொடியை அறிமுகம் செய்வேன் என்றும் அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க : வாக்குப்பதிவு இடத்துக்கு விசிட் அடித்த யானை.. ஷாக்கான வாக்காளர்கள்… மேற்கு வங்கத்தில் சம்பவம்!

தெலங்கானா ராஷ்ட்ர சேனா கட்சியை தொடங்கிய கவிதா

கவிதா தான் கூறியபடியே தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியை இன்று தொடங்கியுள்ளார். தனது சகோதரர் கே.டி.ராமாராவ் ஆதாரவாலர்களுக்கு சவால் விடும் வகையில் அவர் இந்த புதிய கட்சியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஈரானின் நடவடிக்கையால் உலக அளவில் இண்டர்நெட் சேவை பாதிப்பு? அதிர்ச்சி தகவல்
எறும்புகளை துன்புறுத்தும் சர்ச்சை வீடியோ - நெட்டிசன்கள் எதிர்ப்பு
வங்கியின் அலட்சியத்தால் வாடிக்கையாளருக்கு ரூ. 3.21 லட்சம் இழப்பீடு
உலகின் வெப்பமான நகரங்களின் பட்டியிலில் இந்தியாவின் 19 நகரங்கள்