10-12-ஆம் வகுப்பு மாணவர்களே அலர்ட்….தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
CBSE Exam Dates Have Been Changed : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .

சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து உள்ளது. கடந்த டிசம்பர் 29- ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில், 2026 மார்ச் 3- ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், வேறு எந்த தேர்வுகளும் மாற்றப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3- ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு மாற்றப்பட்டு மார்ச் 11- ஆம் தேதி நடைபெறும்.
12- ஆம் வகுப்பு தேர்வு தேதி மாற்றம்
இதே போல, 12- ஆம் வகுப்புக்கு மார்ச் 3- ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மாற்றப்பட்டு ஏப்ரல் 10- ஆம் தேதி நடைபெற உள்ளது. 12- ஆம் வகுப்பு அட்டவணையில் நீட்டிக்கப்பட்ட இடைவெளிக்கான காரணங்களை சிபிஎஸ்இ குறிப்பிடவில்லை. 12- ஆம் வகுப்புக்கு மறு திட்டமிடப்பட்ட தேர்வு சட்டப் படிப்புகள் என்றும், அது ஏப்ரல் 10- ஆம் தேதி நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல மொழி மற்றும் விருப்ப பாடங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மக்களே இதை நோட் பண்ணூங்க.. இன்றும் நாளையும் அரசு இ சேவை மையம் செயல்படாது..
பல்வேறு பாடங்கள் பாதிப்பு
இதில், திபெத்தியன், ஜெர்மன், என்சிசி, போதி, போடோ, தங்குல், ஜப்பானியம், பூட்டியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, பஹாசா மெலாயு மற்றும் புத்தக பராமரிப்பு, கணக்கியல் கூறுகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து வினாத்தாள்களும் மார்ச் 3- ஆம் தேதிகளுக்குப் பதிலாக மார்ச் 11- ஆம் தேதி நடைபெறும். இதற்கான தேதி தாள்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டதும் மாணவர்களின் அனுமதி அட்டைகளில் குறிப்பிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதில், தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவும், தேர்வர்கள் தங்கள் தேர்வு தயாரிப்பை சீராக திட்டமிடவும் உதவும் வகையில், திருத்தப்பட்ட அட்டவணையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விரைவில் அனுப்புமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையில் வேறு மாற்றம்
இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. மேலும், வாரியத் தேர்வு அட்டவணையில் மேலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ- இன் இந்த திடீர் மாற்றத்தால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: 70 ஐபிஎஸ் அதிகாரிகள், 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு?