முல்லை பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு சம்பவம்
Mullai Periyar Dam: முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்து அழிக்கப்போவதாக கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அணையின் அருகே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை பெரியாறு அணை
தமிழ்நாடு, கேரளா (Kerala) ஆகிய மாநிலங்களுக்கு நீர் ஆதரமாக முல்லை பெரியாறு அணை இருந்து வருகிறது. குறிப்பாக இந்த அணையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அணையின் உறுதித் தன்மை குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னைகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் பாண்டியனுக்கு அக்டோபர் 13, 2025 அன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் உடனடியாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ் செருவத்துக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிகாரிகள் அணையின் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தனர்.
முல்லை பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்
முல்லைப் பெரியாறு அணை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்ற திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மிரட்டல் செய்தி வந்தது. இதை அறிந்ததும், இடுக்கி மாவட்ட நிர்வாகம் மாநில காவல்துறையினர், வனத்துறைத் தலைவர், தமிழ்நாடு டிஜிபி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டது காவல்துறையினர் தலைமையிலான காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.
இதையும் படிக்க : பாலியல் துன்புறுத்தல்…. ஐடி ஊழியர் தற்கொலை – வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த நிலையில், பெரியாறு அணையில் மோப்ப நோய் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் போது சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வெடி குண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கோரிக்கை
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரளா சார்பில் தாக்கல் செய்யப்பட் மனுவை அக்டோபர் 13, 2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. அதே நாளில், அணை வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்பட்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி மாவட்டம் பீருமேடு தாலுகாவில் பெரியாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறில் சேகரிக்கப்படும் நீர் தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க : பெண்களுக்கு குட் நியூஸ்.. 12 நாட்கள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு.. அதிரடி நடவடிக்கை!
முக்கியமாக அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா கேள்வி எழுப்பி வருகிறது. இங்கு புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கோரிக்கவிடுக்கும் நிலையில் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கேரளா நிராகரித்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில மக்களும் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.