பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர் யார்?

Nitish Kumar Resigned As A Chief Minister | பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பீகாரின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.. அடுத்த முதல்வர்  யார்?

நிதிஷ் குமார்

Published: 

14 Apr 2026 20:10 PM

 IST

பாட்னா, ஏப்ரல் 14 : பீகாரில் (Bihar) முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் (Nitish Kumar) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் மாநிலங்களை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அதன் காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாகவும் நிதிஷ் குமார் அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. அவர் பதவியில் இருந்து விலக கூடாது என கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், தான் கூறியபடி அவர் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில்,  பீகாரின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ்குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் அந்த முடிவை எடுக்க கூடாது என்றும், முதலமைச்சர் பதவியை தொடர வேண்டும் என்றும் கட்சியினர் வலியுறுத்தினர். இதற்கு இடையே தான் மார்ச் 30, 2026 அன்று தனது எம்.எல்.சி பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே அவர் இந்த முடிவை அவர் எடுத்தார்.

இதையும் படிங்க : கும்பமேளா ‘வைரல் பெண்’ மோனாலிசா திருமணத்தில் அதிரடித் திருப்பம்.. கணவர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு

21 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது

கட்சியினர் நிதிஷ்குமார் பதவி விலக கூடாது என வலியுறுத்தினாலும், தனது முடிவில் உறுதியாக இருந்த அவர் இன்று பதவி விலகினார். நிதிஷகுமார் பீகாரில் 21 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வகித்துள்ளார். மாநிலத்தில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் ஒருவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக நிதிஷ்குமார் உள்ளார். குறிப்பாக 2025, நபம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10வது முறையாக பீகார் முதலமைச்சராக அவர் பதவியேற்றார்.

இதையும் படிங்க : 1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்ட கேரள சிறுமி.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்

பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார்?

நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் பதவி அவரது மகனுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பீகாரின் அடுத்த முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி  என்பவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், புதிய அரசுக்கு எப்போதும் தன்னுடைய ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்