ரூ.60 லட்சத்தில் திருமணம்.. நகை, ரூ.10 லட்சம் பணம்.. வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை!
Bengaluru Young Woman Killed Herself | பெங்களுரில் லதா என்ற 23 வயது இளம் பெண்ணுக்கு, குருராஜ் என்ற 30 வயது நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கணவரின் குடும்பத்தார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில், லதா தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட லதா மற்றும் அவரது கணவர்
ஷிவமொக்கா, நவம்பர் 27 : இந்தியாவில் வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அந்த வகையில், பெங்களூரில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாப்பிள்ளைக்கு அதிகப்படியான வரதட்சணை கொடுத்தும், திருமணத்திற்கு பிறகு வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை படுத்திய நிலையில், அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை
பெங்களூரின் ஷிவமொக்கா மாவட்டம், பத்ரவாதி தாலுகாவின், டி.பி ஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் குருராஜ். 30 வயதாகும் இவர் கே.பி.சி.எல்-லில் பத்ரா அணையின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஷிகாரிபுராவின், தின்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த லதா என்ற 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்கள் 2024, ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். காதலர் திணத்தன்று திருமணம் செய்துக்கொண்ட லதாவின் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்.. சிறுமி விபரீத முடிவு!
வரதட்சணையாக தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம்
திருமணத்தின் போது லதாவின் பெற்றோர் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணத்தையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும், மாப்பிள்ளை அரசு அதிகாரி என்பதால் ரூ.60 லட்சம் பணம் செலவு செய்து திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். ஆனால், திருமணமான ஒரே மாதத்தில் கணவரின் வீட்டார் லதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, லதாவின் கணவர் குருராஜ் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக அவரின் அக்கா மகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க : மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள்.. இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்..
கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட லதா
கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கொடுமை ஒரு பக்கம், கணவரின் தகாத செயல்கள் ஒருபக்கம் என லதா மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் தான் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் ஆபத்தான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, நவம்பர் 23, 2025 அன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு பத்ராவதியின், சித்தாபுரா அருகில் உள்ள பத்ரா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
லதா தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தான் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை அருகில் உள்ள கோயில் அருகில் வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரின் உடலை தீயணைப்பு துறையின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)