பாகிஸ்தானுடன் மீண்டும் போர் உருவானால் இந்தியாவுக்கு பலுசிஸ்தான் துணை நிற்கும்.. BLA அறிவிப்பு!
Balochistan Supports India in India - Pakistan Conflict | இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மீண்டு ஏதேனும் சிக்கல் எழுந்தால் இந்தியாவுக்கு துணை நிற்போம் என பலுசிஸ்தான் அறிவித்துள்ளது.

சென்னை, மே 12 : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (India – Pakistan) மீண்டும் மோதல் ஏற்பட்டால் பலுசிஸ்தான், இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் என்று BLA (Balochistan Liberation Army) அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலில் உள்ள நிலையில், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் தான், இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து பலுசிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் தொடர்பாக பலுசிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack ) இந்தியா, பாகிஸ்தான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்த இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100-க்கும் மேபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில், மே 10, 2025 அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஒரு சில மணி நேரம் கழித்து மீண்டும் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியாவும் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து பதிவிட்டிருந்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்திருந்தது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் எழலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பலுசிஸ்தான்
BLA message for indians brothers read and share to every indians. pic.twitter.com/qBDq06s9Tv
— jangihan baloch (@AzadiBaloch01) May 11, 2025
இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பலுசிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுத்தால் இந்தியாவுக்கு ஆதரவாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் துணை நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு சூழல் உருவானால், மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தானை சுற்றி வளைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் நடவடிக்கையை தாங்கள் வரவேற்பதாகவும், ராணுவ பலமாக இந்தியாவுடன் நிற்போம் என்றும் அது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.