நகத்தால் கீறிய வளர்ப்பு நாய்.. அடுத்த 5 நாட்களில் பலியான காவல் ஆய்வாளர்.. சோக சம்பவம்!
Police Officer Dies of Rabies | இந்தியாவில் ரேபிஸ் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அது தொடர்பான மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் நோய் தொற்றுக்கு பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
அகமதாபாத், செப்டம்பர் 24 : குஜராத (Gujarat) மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) பகுதியை சேர்தவர் காவல் ஆய்வாளர் வன்ராஜ் சிங் மஞ்சரியா. 25 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் செப்டம்பர் 19, 2025 அன்று வன்ராஜ் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர்.
காவல் ஆய்வாளருக்கு உறுதி செய்யப்பட்ட ரேபிஸ் தொற்று
காவல் ஆய்வாளரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது உடலில் நாயின் நகக் கீரல் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். அதுமட்டுமன்றி அவருக்கு ரேபிஸ் நோயாளிகளுக்கு இருப்பதை போலவே தண்ணீர் ஒவ்வாமை, காற்று ஒவ்வாமை ஆகியவை இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகித்த மருத்துவர்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வள முடிவில் காவல் ஆய்வாளருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அதிர்ந்த பெங்களூர் பஸ் ஸ்டாண்ட்… மகள் கண்முன்னே பெண் துடிதுடித்து பலி… கணவர் செய்த கொடூரம்!
காணாமல் போன நாய் திரும்பி வந்ததால் ஏற்பட்ட ஆபத்து
காவல் ஆய்வாளருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது காவல் ஆய்வாளருக்கு அதிக செல்லப்பிராணிகள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று காணாமல் போன நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்துள்ளது. அப்போது அந்த நாயின் நகம் அவரை கீறியது. நாய்களுக்கு ரேபிஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்பதாலும், அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்ததாலும் அதனை அவர் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபர்.. காட்டிக் கொடுத்த செல்ஃபி!
சிகிச்சை பலனின்றி பலியான காவல் ஆய்வாளர்
குடும்பத்தினர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல் ஆய்வாளருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ஒருசில நாட்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.