ஹோர்முஸ் வழியாக இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 20 கப்பல்கள்!

20 India's Fuel Tankers To Cross Strait Of Hormuz | இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மேலும் 20 எரிபொருள் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் வழியாக இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 20 கப்பல்கள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

20 Mar 2026 07:45 AM

 IST

புதுடெல்லி, மார்ச் 20 : ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் (Iran) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை கடந்து வருவது இந்திய (India) எண்ணெய் கப்பல்களுக்கு மிகுந்த சவாலாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஈரான் ஒருசில நாடுகளுக்கு மட்டும் தனது பிடியை தளர்த்தியுள்ளதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை கப்பல்கள் கடந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 20 எரிவாயு கப்பல்கள் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான்

இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) இணைந்து தன் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. ஆரம்பத்தில் எந்த கப்பல்களும் நீரிணையை கடந்து செல்லாதபடி கடுமையான விதிகளை அமலில் வைத்திருந்தது. அதன் பிறகு நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்லலாம் என ஈரான் அறிவித்தது. அந்த வகையில் இந்திய கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் நந்தா தேவி மற்றும் ஷிவாலிக் ஆகிய எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்துள்ளன.

இதையும் படிங்க : ஈத் முபாரக் மற்றும் ஒற்றுமைச் செய்தி.. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி !

ஹோர்முஸை கடந்து இந்தியா வரும் மேலும் 22 எல்பிஜி கப்பல்கள்

இந்த நிலையில், தற்போது மேலும் 22 எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல்களில் மொத்தம் 20 கப்பல்களில் எரிபொருள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 2.15 லட்சம் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, 3.21 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு மற்றும் 16.76 லட்சம் டன் கச்சா எண்ணெய் எரிவாயு ஆகியவை ஏற்றி வரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?.. அவற்றின் முக்கியத்தும் என்ன?

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் சூழல் உருவாகியுள்ளது

இந்த 20 எல்பிஜி கப்பல்களில் 10 கப்பல்கள் இந்திய கொடியுடனும் மற்ற கப்பல்கள் சிறிய சிறிய தீவுகளின் கொடிகளுடனும் கடந்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிக கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. இந்த நிலையில், இந்தியாவுக்கு தொடர்ந்து வரும் எண்ணெய் கப்பல்கள் மூலம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறையும் சூழல் உருவாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
WITT Summit 2026: பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் மாநாடு.. இந்தியா வளர்ச்சி திசை குறித்து முக்கிய விவாதம்.. முழு விவரம்..
ஈஷா அறக்கட்டளை, சத்குரு குறித்து நக்கீரன் வெளியிட்ட வீடியோக்கள்.. உடனடியாக நீக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்..
வழங்காத சிகிச்சைக்கும் கட்டணம்… நோயாளி கேள்வியில் வெளியான உண்மை
கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பம்.. மாந்திரீகம் செய்வதாக எழுந்த சந்தேகத்தால் விபரீதம்!
ஈத் முபாரக் மற்றும் ஒற்றுமைச் செய்தி.. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி !
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?.. அவற்றின் முக்கியத்தும் என்ன?
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்