டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழப்பு.. ஏசி வெடித்ததே காரணம்?

கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 10-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்களும் உள்ளூர் மக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் காயமடைந்த 7 பேர் உடனடியாக குரு தேக் பகதூர் (GTB) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழப்பு.. ஏசி வெடித்ததே காரணம்?

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

Updated On: 

03 May 2026 10:33 AM

 IST

தலைநகர் டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 7-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஒன்றில், இன்று (மே 3) அதிகாலை சுமார் 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தொடங்கிய தீ, கண் இமைக்கும் நேரத்திற்குள் மற்ற தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பலரால் கட்டிடத்தை விட்டு வெளியேற முடியவில்லை.

இதையும் படிக்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.. தர்பூசணி பழம் காரணமா? பச்சையாக மாறிய உடல் உறுப்புகள்.. ஷாக் தகவல்!!

14 தீயணைப்பு வாகனங்கள்:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 14 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காலை 6:00 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 10-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்களும் உள்ளூர் மக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் காயமடைந்த 7 பேர் உடனடியாக குரு தேக் பகதூர் (GTB) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களையும் சேர்த்து தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஷா்தாரா டிசிபி ராஜேந்திர பிரசாத் மீனா இது குறித்துக் கூறுகையில், “அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. தீயணைப்பு வாகனங்களும் உள்ளூர் காவல்துறையினரும் உடனடியாக இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம் என்ன?

தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் கட்டடத்தில் இருந்த ஏசி (Air Conditioner) இயந்திரம் ஒன்று அதிக வெப்பம் காரணமாக வெடித்ததே தீ விபத்திற்கு காரணம் என்று உள்ளூர்வாசிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

சோகத்தில் விவேக் விஹார்:

அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
Related Stories
டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!
ஜபல்பூர் விபத்து.. தாய் – மகன் பலி தொடர்பாக வைரலாகும் புகைப்படம் உண்மை அல்ல.. ஆட்சியர் விளக்கம்!
சந்தேகம்.. மனைவியை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன்.. தவிக்கும் 4 மாத பச்சிளம் குழந்தை!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்.. தர்பூசணி பழம் காரணமா? பச்சையாக மாறிய உடல் உறுப்புகள்.. ஷாக் தகவல்!!
வாக்கு எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள்.. உச்சநீதிமன்றத்தை அணுகிய மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு!!
ம.பியில் அணைக்கட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபம்.. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..