கேரளாவில் வெயிலால் அதிகரித்த பாம்பு தொல்லை.. ஒரே வாரத்தில் 6 பேர் பலி!

6 Died In a Week In Kerala By Snakebite | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கல் மிக கடுமையாக உள்ளது. இந்த நிலையில், வெயிலின் காரணமாக கேரளாவில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில்  வெயிலால் அதிகரித்த பாம்பு தொல்லை.. ஒரே வாரத்தில் 6 பேர் பலி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Apr 2026 18:52 PM

 IST

திருவனந்தபுரம், ஏப்ரல் 28 : கேரளாவில் (Kerala) ஒரே வாரத்தில் பாம்பு கடித்து 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி பொதுமக்களின் வீடுகளுக்குள் செல்வதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் உருவெடுத்துள்ள இந்த முக்கிய பிரச்னை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் பாம்பு கடித்து பலியான 6 பேர்

கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 19, 2026 அன்று திருச்சூரில் இரண்டு சகோதரர்களை பாம்பு கடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5 விஷம் உள்ள பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரே வாரத்தில் மட்டும் கேரளாவில் பாம்பு கடித்து 6 பேரி பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : ஏன் இந்தியர்கள் இப்போது உள்நாட்டு சுற்றுலாவை அதிகம் தேர்வு செய்கிறார்கள்?

சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கேரளாவில் நிலவும் இந்த சூழல் குறித்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், மாநிலத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பாம்புகள் வீடுகள் உள்ளிட்ட குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றன. இதன் காரணமாக தான் பாம்பு கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வெளியானது நீட் தேர்வு ஹால் டிக்கெட்.. மே 3- இல் தேர்வு – ரிசல்ட் எப்போது தெரியுமா?

பாம்பு கடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை

  • வீடுகள், சன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும்.
  • தரையில் மற்றும் கதவுகளை திறந்து வைத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும்.
  • இருளில் செல்லும்போது டார்ச் லைட் எடுத்து செல்ல வேண்டும்.
  • பயன்படுத்துவதற்கு முன்பு படுக்கைகள், காலணிகள், பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்யவும்.

மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..