கூகுள் மேப்பால் விபரீதம்.. ஆற்றில் பாய்ந்த வேன்.. 4 பேர் உயிரிழப்பு!

Rajasthan Accident : ராஜஸ்தான் மாநிலத்தில் கூகுள் மேப் காட்டிய வழிகாட்டுதலின்படி, சென்ற வேன் விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாத பாலத்தில் வேன் சென்றபோது, ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மேப்பால் விபரீதம்..  ஆற்றில் பாய்ந்த வேன்.. 4 பேர் உயிரிழப்பு!

விபத்து நடந்த பகுதி

Published: 

28 Aug 2025 06:20 AM

ராஜஸ்தான், ஆகஸ்ட் 28 : ராஜஸ்தானில் கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, வேனை இயக்கியபோது எதிர்பாராத விதமாக வேன் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 5 பேர் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் முன்பு எல்லாம் புதிதாக ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால் வழி கேட்டு சென்று வருவோம். ஆனால், இன்று அப்படி இல்லை. நவீன காலத்திற்கு ஏற்ப கூகுள் மேப்பை அனைவரும் பயன்படுத்தி சென்று வருகின்றனர். கூகுள் மேப் காட்டும வழியை நம்பியை பலரும் பயணித்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தானில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.

கூகுள் மேப்பால் விபரீதம்

ராஜஸ்தானின் சித்தோர்கரில் இந்த விபத்து நடந்துள்ளது. 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜெய்பூரைச் சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர் பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வேனில் சென்றனர். தரிசனத்தை முடித்த குடும்பத்தினர், வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை ஓட்டுநர் கூகுள் மேம் பார்த்து இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு வழி தெரியாததால் கூகுள் பார்த்து வேனை ஓடினார். அதிகாலை 1 மணியளவு என்பதால் வேனில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, கூகுள் காட்டி வழியிலேயே வேனை ஓட்டுனர் இயக்கினார்.

Also Read : கற்களால் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்.. ம.பி பாரம்பரிய நிகழ்வில் 1,000 பேர் காயம்!

அப்போது, சொமி உப்ரிடா பாலத்தில் வேன் சென்றிருக்கிறது. அந்த பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பாலம் கூகுள் மேப்பில் பயன்பாட்டில் இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. இதனால், வேனை பாலத்தில் இயக்கியபோது, திடீரென வேன் பனாஸ் பாய்ந்தது. வேன் ஆற்றில் அடித்த செல்லப்பட்டது.

4 பேர் உயிரிழப்பு

பனாஸ் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததால் ஆற்றைக் கடப்பதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டன. இருப்பினும், ஓட்டுநர் மூடப்பட்ட பாலங்களில் ஒன்றைக் கடந்தார். வேனில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்து அதன் மேல் ஏறினர். அவர்களில் ஒருவர் தனது உறவினர் மற்றும் போலீசாருக்கு போனில் தகவல் கொடுத்தார்.

மேலும், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மொபைல் டார்ச் மூலம் மீட்புக் குழுக்களுக்கு சமிக்ஞை செய்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசாருக்கு மீட்புக் குழுக்களும் விரைந்தனர். அப்போது, அங்கு வந்த மீட்பு குழுக்கள் வேனில இருந்தவர்களை மீட்டுள்ளனர். இதில் 3 பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமியும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

Also Read : 2 மாத குழந்தைக்கு அவசர தடுப்பூசி… உயிரைப் பணயம் வைத்து நர்ஸ் செய்த சம்பவம்.. குவியும் பாராட்டு!

இவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. மற்றொரு சிறுமியை தேடும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் சந்தா (21), அவரது மகள் ருத்வி (6), மம்தா (25) மற்றும் அவரது மகள் குஷி (4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 5 பேர் உயிர் பிழைத்துள்ளனர். கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி சென்றதால், 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.