திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை!

3 Crore 84 Lakhs Offering Box Collection In Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில், லட்சக்கணக்கான பணத்தை காணிக்கையாக செலுத்தி செல்வர். அந்த வகையில், ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Jan 2026 12:57 PM

 IST

திருமலை, ஜனவரி 24 : திருப்பதியில் (Tirupati) உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதன் காரணமாக இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தங்களிடம் உள்ள பணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு செல்வர். நாள்தோறும் ஆயிரக்கணககான பக்தர்கள் திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்தும் நிலையில், அங்கு தினமும் லட்ச கணகிக்கில் காணிக்கை பெறப்படும். அந்த வகையில், திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.3.84 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 22, 2026 அன்று அதிகப்படியான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதாவது அன்றைய தினம் மட்டும் சுமார் 64,571 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் சுமார் 23, 634 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அது தவிர ஏராளமான பக்தர்கள் உண்டியல் காணிக்கையும் செலுத்தியுள்ளனர். அதன்படி, அன்றைய தினம் மட்டும் திருப்பதி கோயிலில் சுமார் ரூ.3 கோடியே 84 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய பட்ஜெட் 2026: ஐடி துறை முதல் சுகாதார துறை வரை.. காத்திருக்கும் பெரிய மாற்றங்கள் என்ன?

இதற்கு முன்பும் 3.84 கோடி உண்டியல் காணிக்கை

ஜனவரி 22, 2026 அன்று பெறப்பட்டதை போலவே, ஜனவரி 15, 2026 அன்றும் ரூ.3 கோடியே 84 லட்சம் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 76 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்காளில் சுமார் 27 ஆயிரத்து 586 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி இருந்தனர். அன்றைய தினம் மட்டும் பக்தர்கள் செலுத்திய மொத்த காணிக்கை ரூ.3 கோடியே 84 லட்சம் என்று கோயில் நிர்வாகம அறிவித்து இருந்தது.

இதையும் படிங்க : Republic Day Parade 2026 : குடியரசு தின அணிவகுப்புக்கு தயார் நிலையில் டெல்லி.. நேரலை விவரங்கள் இதோ!

இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே ஒருமுறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை பெறப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரூ.3 கோடியே 84 லட்சம் காணிக்கை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..