அடுத்த சர்ச்சை.. வைக்கம் கோயிலில் 255 கிராம் நகைகள் மாயம்

Kerala Gold Scam: கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் மாயமான சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது வைக்கம் மகாதேவர் கோயிலிலும் 255 கிராம் தங்கம் காணாமல் போனது தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம் லாக்கர் அறையில் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சர்ச்சை.. வைக்கம் கோயிலில் 255 கிராம் நகைகள் மாயம்

வைக்கம் மகாதேவா கோயில்

Updated On: 

15 Oct 2025 07:08 AM

 IST

கேரளா, அக்டோபர் 15: சபரிமலை கோயிலை தொடர்ந்து கேரள மாநிலத்தின் வைக்கம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மகாதேவர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி அம்மாநில மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் சமீபகாலமாக வெளியாகும் தகவல்கள் யாவும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிகப்பெரிய மோசடி ஒன்று கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது வைக்கம் மகாதேவர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 255.83 கிராம் தங்கம் மாயகிமாகி இருப்பதாக மாநில தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

கடந்த 2020–21 நிதியாண்டிற்கான கோயிலின் பதிவேடுகளை தணிக்கைக் குழு ஆய்வு செய்தது. அப்போது 255 கிராம் தங்கம் கணக்கில் வராதது கண்டறியப்பட்டது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பக்தர்கள் பாரம்பரியமாக கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

Also Read: தன் பேக்கரியில் திருடிய நபருக்கு விருது.. இப்படியும் ஒரு உரிமையாளர்!

இந்த காணிக்கைகள் அங்குள்ள ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவை உறை சுற்றப்பட்டு , பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படும். தணிக்கையில் கோவிலில் மொத்தம் 199 தங்கப் பொட்டலங்கள் இருப்பதும், பதிவேட்டில் 3,247.9 கிராம் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். இருப்பினும், பாதுகாப்பு அறையை ஆய்வு செய்ததில் 2,992.07 கிராம் தங்கம் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

தணிக்கையின் அடிப்படையில் 255.83 கிராம் பற்றாக்குறை இருப்பதை தணிக்கைத் துறை உறுதிப்படுத்தியது. காணாமல் போன தங்கத்திற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு, தணிக்கைத் துறை திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் விளக்கம் கோரியிருந்தது ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.  இதனால் ஆன்மிக அன்பர்கள் கேரள மாநில அரசுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: தீரன் பட பாணி.. திருச்சியில் நகை கொள்ளை.. சிக்கிய பவாரியா கும்பல்

சபரிமலையில் நடந்தது என்ன?

26 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை முன்புறம் மற்றும் பீடங்களுடன் கூடிய இரு துவார பாலகர்கள் சிலைக்கு தங்க தகடுகள் பொருத்தப்பட்டது. இதற்கான தங்கம், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவால் அளிக்கப்பட்டது.

இதனை பழுது பார்க்க உன்னிக்கிருஷ்ணன் போற்றி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு சென்னைக்கு எடுத்து வந்தார். அதனை திருப்பி அளித்தபோது சுமார் 4 கிலோ வரை தங்கம் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து தீவிர விசாரணை நடைபெற்றது. ஆனால் தன்னிடம் கொடுக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலையில் உள்ள தங்கத்தகடுகள், தங்கம் அல்ல செம்பு என உன்னிக்கிருஷ்ணன் போற்றி தெரிவித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி மக்கள் உண்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.