Sleeping Direction: இடதா..? வலதா..? எந்த பக்கம் தூங்குவது இதயத்திற்கு நல்லது..?
Best Sleep Position For Heart: நாம் தூங்கும் விதம் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இடது பக்கமாக தூங்குவதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

தூங்கும் நிலை
செல்போனுக்கு சார்ஜ் போதுவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல் நம் உடல் சரியாக இயங்குவதற்கு தூக்கம் (Sleeping) மிக மிக முக்கியம். தினமும் நம் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்பட போதுமான மற்றும் நல்ல தூக்கத்தை பெறுவது மிகவும் முக்கியமானது. ஒரு சிலருக்கு இடது பக்கம் உடலை வைத்து தூங்குவது பிடிக்கும், ஒரு சிலருக்கு வலது பக்கம் உடலை வைத்து தூங்குவது பிடிக்கும், சிலர் முற்றிலும் குப்புறப்படுத்து வயிற்றை தரையில் வசதியாக தூங்குவர். சிலர் முதுகு தரையில் படும்படி தூங்குவர். இப்படி நாம் தூங்கும் விதம் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இடது பக்கமாக தூங்குவதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இது செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இதய நோய் (Heart Disease) அபாயத்தையும் குறைக்கிறது.
முதுகு வலியிலிருந்து நிவாரணம்:
இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரும்படியான வேலையை மேற்கொள்கின்றனர். இதனால், பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில், முறையற்ற தூக்க நிலை காரணமாக முதுகு வலி மேலும் அதிகரிக்கலாம். அதன்படி, நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இந்த நிலை உங்கள் முதுகெலும்பை ஆதரித்து, முதுகில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.
ALSO READ: மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை… தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்
குடலுக்கு நன்மை:
நீங்கள் தினந்தோறும் வலது பக்கமாகவோ அல்லது வயிற்றை அழுத்தி தூங்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், இந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில், இந்த நிலையில் தூங்குவது உங்கள் தூக்கத்தை பாதிக்க செய்வது மட்டுமின்றி, உங்கள் உடல் உறுப்புகளின் சரியான செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே, உங்கள் இடது பக்கமாக தூங்குவதைப் பழக்கமாக்குங்கள். இது உங்கள் குடலுக்கும், குடல் இயக்கத்திற்கும் நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கியம்:
இடது பக்கம் தூங்கும்போது, அது நம் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதயம் நம் உடலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. இடது பக்கம் தூங்கும்போது, அது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்கி , இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த வகையான தூக்கம் எந்த அழுத்தத்தையும் தடுக்கிறது. மேலும், இதயத்தில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
ஆக்ஸிஜனை கடத்தும்:
நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவது ஆக்ஸிஜனின் சிறந்த விநியோகத்தையும் உறுதி செய்கிறது. இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சரியாகவும், உடலின் உறுப்புகள் மற்றும் மூளைக்கு தடையின்றியும் பாய்ந்து, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ALSO READ: உங்கள் கால்களில் இந்த பிரச்னை இருக்கா? இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்
குறட்டையில் இருந்து விடுபட உதவும்:
ஒருவர் மிகவும் டையர்ட்டாக இருக்கும்போது தூக்கத்தில் குறட்டை விட தொடங்குவார்கள். இது ஒரு இயற்கையான செயல். ஆனால், அதேநேரத்தில் தினமும் தூங்கும் போது குறட்டை விடுபவர்களுக்கு இது நல்லதல்ல. இது ஒரு கடுமையான பிரச்சனை. அதிகமாக குறட்டை விடுபவர்கள் காற்றுப்பாதைகள் திறந்திருக்கும் வகையில் இடது பக்கமாக தூங்க முயற்சிக்க வேண்டும். இது குறட்டை பிரச்சனையை தளர்த்தி நிம்மதியாக தூங்க உதவி செய்யும்.