Summer Health Tips: கோடைக்காலத்தின் எனர்ஜி ட்ரிங்ஸ்! சுரைக்காய் ஜூஸில் இவ்வளவு அற்புத நன்மைகளா?
Zucchini Juice Benefits: கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வைப் போக்க சுரைக்காய் ஜூஸ் சிறந்தது. 92% நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்த இது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. சருமம், கூந்தல் ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் உதவும். கோடைக்காலத்தில் தினமும் சுரைக்காய் ஜூஸ் அருந்தி ஆரோக்கியமாக இருங்கள்.

கோடை காலம் (Summer) வந்தாலே தினமும் நாம் சோர்வாக உணர தொடங்குவோம். இதற்கு முக்கிய காரணம் அதீத வெப்பநிலைதான். அதன்படி, கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நிரேற்றமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த பருவத்தின்போது வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலையானது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி உடலை சோர்வடைய செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், சுரைக்காய் ஜூஸ் (Zucchini Juice) ஒரு இயற்கையான எனர்ஜி ட்ரிங்ஸ் என்றே சொல்லலாம். இது உடலை உடனடியாக குளிர்விப்பது மட்டுமல்லாமல், பல வெயில்கால பிரச்சனைகள் வராமல் தடுத்து நிவாரணம் அளிக்க உதவி செய்யும். அந்தவகையில், கோடைக்காலத்தில் சுரைக்காய ஜூஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
சுரைக்காய் ஜூஸ் எப்படி நன்மை தரும்..?
சுரைக்காயில் கிட்டத்தட்ட 92 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் இது உடலை உள்ளிருந்து சுத்திகரித்து குளிர்ச்சியான விளைவை அளிப்பதாக அறியப்படுகிறது.
சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடல் குளிர்ச்சி:
கோடைக்காலத்தில் உடல் விரைவாக சோர்வடைந்து, ஆற்றல் குறைய தொடங்கும். இதுபோன்ற நேரத்தில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியையும் சக்தியையும் தரூகிறது. இது வெப்ப அலை மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வை கொடுக்கும்.
செரிமானம் மேம்படும்:
கோடைக்காலத்தின்போது சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகள் ஏற்படும். சுரைக்காயில் அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்தானது செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்யும். அதன்படி, இதன் சாற்றை உட்கொள்வது மலச்சிக்கல், வாயு மர்றும் அஜீரண பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது:
சுரைக்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி செய்யும். சுரைக்காயில் குறைந்த அளவிலான கலோரிகளும், குறைந்த கிளைசெமிக் குறீயிடும் உள்ளது. இதன் காரணமாக, சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்யும்.
இரத்த அழுத்தம்:
சுரைக்காயில் உள்ள பொட்டாசிய பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இதய ஆரோக்கியத்தை பெருமளவில் மேம்படுத்த பெரிதும் உதவி செய்கிறது.
சருமம், கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்தது:
சுரைக்காய் ஜூஸில் உள்ள வைட்டமின்கள் முடி வேர்களை வலுப்படுத்துகின்றன. இதனால், முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு போன்ற பிரச்சனை சரியாகும். மேலும், சுரைக்காய ஜூஸ் சருமத்தின் பளபளப்பாக வைப்பது மட்டுமின்றி, முகப்பரு போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.
எடை குறைக்க உதவும்:
உடல் எடை பிரச்சனையால் அவதிப்பட்டு, குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், சுரைக்காய் ஜூஸ் சிறந்த மருந்தாகும். இதை தினமும் காலை முடிப்பதன்மூலம் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய பிம்பத்தை கொடுக்கும். இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். மேலும், சுரைக்காய் ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைத்து, எடையை வேகமாக குறைக்க உதவும்.