உங்களுக்கு திடீரென கை, கால்களில் வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்

Sudden Pain Alert: பலரும் திடீரென கை கால்களில் கடுமையான வலி ஏற்படும் பிரச்னையை சந்தித்திருப்போம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் இது திடீர் அதிர்ச்சியினாலும் நிகழலாம். இது தவிர, சில நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதற்கு பின்னால் பொதுவான காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உங்களுக்கு திடீரென கை, கால்களில் வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்னையாக இருக்கலாம்

மாதிரி புகைப்படம்

Published: 

20 Jun 2025 21:33 PM

 IST

ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென கைகள் மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும் பிரச்னையை பலரும் அனுபவித்திருப்போம்.  இது பல காரணிகளால் ஏற்படலாம். இதற்குக் காரணம் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். இது ஏன் திடீரென்று நடப்பதால் நாம் நிலை குலைந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. கை, கால்களில் திடீர் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக அதிகப்படியான வேலை மற்றும் சில உடல்நலப் பிரச்னைகளால் ஏற்படக் கூடும். சில நேரங்களில் இது திடீர் அதிர்ச்சியினாலும் நிகழலாம். இது தவிர, சில நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உங்களுக்கும் திடீரென்று கைகளிலும் கால்களிலும் வலி ஏற்பட ஆரம்பித்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இதற்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிய வேண்டும். இந்த கட்டுரையில் அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கை, கால்களில் வலி ஏன் ஏற்படுகிறது?

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் மாவட்ட ஒருங்கிணைந்த மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.கே. சிங், கைகள் மற்றும் கால்களில் திடீர் வலிக்கான காரணங்களை விளக்குகிறார். இது தொடர்பாக பேசிய அவர், இவற்றில் பல நோய்கள் காரணமாக இருக்கலாம். பொதுவான காரணங்களாக வாதம், ஃபைப்ரோமியால்ஜியா, நரம்பு வலி, தொற்று ஆகியவை அடங்கும். இது தவிர, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, நீரிழப்பு, வைட்டமின் குறைபாடு மற்றும் சில வகையான மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற கடுமையான காரணங்களும் வலியை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னை உங்கள் உடலில் தொடர்ந்து ஏற்பட்டால், அதைப் புறக்கணிக்கவே கூடாது. இந்த விஷயத்தில், உடனடியாக மருத்துவர்களை அணுகவும்.

கை, கால்களில் வலி இருந்தால் என்ன செய்வது?

உங்கள் கைகளிலோ அல்லது கால்களிலோ திடீரென வலி ஏற்பட ஆரம்பித்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. காரணத்தைக் கண்டறிய நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். சில பரிசோதனைகளுக்குப் பிறகு திடீரென வலி ஏற்படுவதற்கு காரணம் தெளிவாக தெரியும். அதன் பிறகு சிகிச்சையளிப்பதன் மூலமும் அதை குணப்படுத்த முடியும். புறக்கணிக்கப்பட்டால் பிரச்னை இன்னும் தீவிரமாகிவிடும். மருத்துவர் உங்கள் உடலின் வைட்டமின் டி, பி12 மற்றும் கால்சியம் அளவைப் பரிசோதிக்க முடியும். இது தவிர, ஆன்டி-சிசிபி மற்றும் ஆர்த்ரிடிஸுக்கும் சோதனைகள் செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நோயாளிகளுக்கு வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக, மருத்துவர் அவர்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கலாம் அல்லது  ஒரு டயட் சார்ட்டை உங்களுக்கு அளிக்கலாம்.

பொதுவாக இந்த பிரச்னையில் இருந்து விடுபட மக்கள் தங்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேலும் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் எலும்புகள் வலுப்படும். சில நேரங்களில் இது திடீர் அதிர்ச்சியினாலும் நிகழலாம். இது தவிர, சில நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..