Headache: தலைவலியுடன் இந்த 5 அறிகுறிகளா..? உடனடியாக மருத்துவரை நாடுங்கள்..!

Persistent Headache: பொதுவாகவே ஒருவருக்கு தலைவலி வந்தால் அவருக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு அல்லது உடலில் நீரிழப்பு போன்றவையே முக்கியமான காரணம். இதனால்தான், பெரும்பாலான மக்கள் தலைவலி வந்தால் அதை பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. இருப்பினும், ஒரு சிலருக்கு சில நேரங்களில் தலைவலி பிரச்சனை அதிகமாக இருக்கும்.

Headache: தலைவலியுடன் இந்த 5 அறிகுறிகளா..? உடனடியாக மருத்துவரை நாடுங்கள்..!

தலைவலி

Published: 

16 Sep 2025 15:12 PM

 IST

தலைவலி (Headache) என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனையாகும். ஏதோ ஒரு நேரத்தில் அனைவரும் தலைவலியை எதிர்கொள்வோம். பொதுவாகவே ஒருவருக்கு தலைவலி வந்தால் அவருக்கு மன அழுத்தம் (Mental Pressure), தூக்கமின்மை, சோர்வு அல்லது உடலில் நீரிழப்பு போன்றவையே முக்கியமான காரணம். இதனால்தான், பெரும்பாலான மக்கள் தலைவலி வந்தால் அதை பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. இருப்பினும், ஒரு சிலருக்கு சில நேரங்களில் தலைவலி பிரச்சனை அதிகமாக இருக்கும். இது சில நோயின் தீவிரமாக பிரச்சனையாக இருக்கலாம். உங்களுக்கும் தொடர்ந்து தலைவலியுடன் சில சிறப்பு அறிகுறிகள் தோன்றினால், அதை எப்போதும் புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதற்கான காரணம் இதோ..

திடீர் மாற்றம்:

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்து, திடீரென வலியின் தன்மை அதிகரிக்கரித்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது முக்கியம். உங்களுக்கு எப்போதும் லேசான வலி இருக்கும்போது, திடீரென அது அவ்வப்போது மிகவும் கூர்மையான வலியை கொடுத்தால், இது இடியுடன் கூடிய தலைவலி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூளையில் இரத்தக்கசிவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்கக்கூடாது.

ALSO READ: டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு தடுப்பது..?

தலைவலியுடன் பார்வை பிரச்சனை:

உங்களுக்கு தலைவலி வரும்போதெல்லாம், அதனுடன் மங்கலான பார்வை, இரட்டை பார்வை, காதுகளில் அதிகமான இரைச்சல் போன்றவை ஏற்பட்டால், அது முக்கிய நரம்பியல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இது நாளடைவில் உங்களுக்கு பக்கவாதம், மூளைக்கட்டி அல்லது மூளையில் அதிகரித்த அழுத்தம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

தலைவலியுடன் அதிக காய்ச்சல்:

தலைவலியுடன் அதிக காய்ச்சல், கழுத்து இறுக்கம் மற்றும் வாந்தி இருந்தால், அது மூளைக்காய்ச்சல் போன்ற ஆபத்தான தொற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூளைக்காய்ச்சல் என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தின் செல்களில் வீக்கம் ஆகும். இது மரணத்தை விளைவிக்கும். மேலும், இது இந்த அறிகுறிகள் மூளையழற்சி அல்லது வேறு ஏதேனும் கடுமையான தொற்றுநோயாகவும் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், உடனடி சிகிச்சை மிகவும் முக்கியமானது.

50 வயதிற்கு பிறகு புதிய தலைவலி:

தலைவலி பிரச்சனை வயதுக்கு ஏற்ப குறைய தொடங்குகிறது. 50 வயதிற்கு பிறகு திடீரென புதிய மற்றும் தொடர்ச்சியான தலைவலி வர ஆரம்பித்தால், இதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இது டெம்போரல் ஆர்டெரிடிஸ், இரத்த நாளத்தில் உள்ள பிரச்சனை அல்லது வேறு ஏதேனும் உள்நோய் போன்ற வயது தொடர்பான சில நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் அடிக்கடி தொண்டை வலியால் தொல்லையா..? காரணங்களும்.. தீர்வுகளும்..!

தலைவலியுடன் பலவீனம்:

உடலின் எந்த பகுதியிலும் பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு, தலைவலி, பேசுவதில் சிரமம் அல்லது சமநிலை இழப்பு ஆகியவை மிகவும் ஆபத்தான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் பக்கவாதம் அல்லது மூளையில் இரத்த உறைவுக்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.