போன் பார்த்து சாப்பிடும் குழந்தையின் பழக்கத்தை மாற்றுவது எப்படி?

How to Break Kids’ Screen-Time Eating Habit: போன் பார்த்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் குழந்தைகளில் அதிகமாகி, அவர்கள் உணவின் அளவையும் சத்தையும் உணராமல் சாப்பிடச் செய்கிறது. இது உடல் பருமன், செரிமான கோளாறு மற்றும் எதிர்கால நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், குடும்ப உறவு, பேச்சுத் திறன் மற்றும் சமூக வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

போன் பார்த்து சாப்பிடும் குழந்தையின் பழக்கத்தை மாற்றுவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Apr 2026 08:30 AM

 IST

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது பல பெற்றோருக்கு சவாலாக மாறியுள்ளது. ஒரு கைப்பிடி உணவை கூட சாப்பிடச் செய்வது கடினமாக இருக்கும் சூழலில், பல வீடுகளில் ‘போன்’ ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. “வீடியோ பாரு… ஒரு வாய் சாப்பிடு” என்று தொடங்கும் இந்த நடைமுறை, குழந்தைகளை மெல்ல மெல்ல திரை அடிமைகளாக மாற்றுகிறது. அன்போடு செய்யப்படும் இந்த செயல், அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகள்

போன் பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது, குழந்தைகள் தாங்கள் எவ்வளவு உணவு எடுத்துக்கொள்கிறார்கள் என்ற உணர்வு இழக்கின்றனர். பசி தீர்ந்த பிறகும் அவர்கள் இயந்திரத்தனமாக சாப்பிடத் தொடர்வார்கள். இது சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து இது அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், உணவை சரியாக மென்று சாப்பிடாததால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு, சத்துக்கள் முழுமையாக உடலுக்குச் சேராமல் போகும் அபாயமும் உள்ளது.

சமூக மற்றும் மொழி வளர்ச்சியில் தாக்கம்

உணவு நேரம் என்பது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான தருணமாகும். ஆனால், அந்த நேரத்தில் குழந்தைகள் திரையில் மூழ்கிக் கொண்டிருந்தால், மற்றவர்களுடன் உரையாடும் ஆர்வம் குறைகிறது. இதனால் பேச்சுத் திறன், மொழி அறிவு மற்றும் சமூக உணர்வு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படலாம். பிறருடன் பழகும் திறன் குறைந்து, தனிமை உணர்வு கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமான மாற்று வழிகள் மற்றும் கூடுதல் குறிப்புகள்

சாப்பிடும் நேரத்தில் போனுக்குப் பதிலாக கதைகள் சொல்லுதல் அல்லது புத்தகங்கள் வாசித்துக் காட்டுதல் போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளை அறிமுகப்படுத்தலாம். குழந்தையின் வயிற்றுத் தேவையை புரிந்து கொண்டு, அவர்களை கட்டாயப்படுத்தி ஊட்டாமல் இருப்பதும் முக்கியம்.

Also Read: வீணாக்காதீங்க… தர்பூசணி தோலில் மறைந்துள்ள அதிசயம்…

பழக்கத்தை மாற்றுவதற்கான நடைமுறைகள்

இந்த பழக்கத்தை திடீரென நிறுத்துவது சரியான முறையல்ல. அதற்குப் பதிலாக, பெற்றோர் படிப்படியாக மாற்றங்களை கொண்டு வர வேண்டும். முதலில் 5–10 நிமிடங்கள் மட்டும் போன் கொடுத்து, பின்னர் அந்த நேரத்தை மெதுவாகக் குறைத்துக் கொண்டே வரலாம். பெற்றோர்களே முன்மாதிரியாக இருந்து, சாப்பிடும் நேரத்தில் போனைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கி, சுவாரஸ்யமான உரையாடல்களை ஊக்குவிக்கலாம். குழந்தைகளிடம் அவர்கள் சாப்பிடும் உணவின் சுவை பற்றி கேட்டு பேசச் செய்வது, உணவின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?