Health Benefits of Chickpea: உடல் ஆரோக்கியத்திற்கு கொத்து கொத்தான நன்மைகள்.. கொட்டித்தரும் கொண்டைக்கடலை!

Roasted Peanuts Benefits: கொண்டைக்கடலை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு. எடை குறைப்பு, மலச்சிக்கல், சர்க்கரை நோய், மற்றும் எலும்பு வலிமை ஆகியவற்றில் நன்மை பயக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த ஊட்டச்சத்து மூலமாகும்.

Health Benefits of Chickpea: உடல் ஆரோக்கியத்திற்கு கொத்து கொத்தான நன்மைகள்.. கொட்டித்தரும் கொண்டைக்கடலை!

கொண்டைக்கடலை

Published: 

10 Sep 2025 19:25 PM

 IST

கொண்டைக்கடலையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொண்டைக்கடலையின் சிறப்பான விஷயம் என்னவென்றால், அதை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளலாம். அதாவது, கொண்டைக்கடலையை கொண்டு குழம்பு செய்வது முதல் ஸ்நாக்ஸாக சாப்பிடுவது வரை, அவற்றை உங்கள் உணவில் பல வழிகளில் சேர்க்கலாம். வறுத்த கொண்டைக்கடலை (Chickpea) சூப்பர்ஃபுட்களிலும் ஒன்றாகும். இதன் விலையும் மலிவானது, இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காரணமாக, இந்த ஸ்நாக்ஸ் அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். இது சுவையானது மட்டுமல்ல, புரதம் (Protein) மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். அதன்படி, கொண்டைக்கடலை சாப்பிடுவது பல வழிகளில் நன்மை பயக்கும்.

கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் என பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், இதில் கலோரிகளும் குறைவு. இதனுடன், வைட்டமின்கள் சி, ஈ, பி, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அவற்றில் காணப்படுகின்றன. அந்தவகையில், கொண்டைக்கடலை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ALSO READ: பருவ காலத்தில் நோய் நாடாமல் இருக்க வேண்டுமா? தினமும் சிட்ரஸ் பழங்களை நாட வேண்டியது ஏன்?

எடை குறைப்பு:

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் வறுத்த கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக நமது வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தந்து, மேலும் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதனுடன், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் வறுத்த கொண்டைக்கடலையை உட்கொள்வது நன்மை பயக்கும். இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நமது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோய்:

வெறும் வயிற்றில் வறுத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். இது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வலுவான எலும்புகள்:

வறுத்த கொண்டைக்கடலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது. ஏனெனில் அதில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

ALSO READ: ஒவ்வாமை முதல் செரிமான பிரச்சனைகள் வரை.. யார் யார் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா..?

இரத்த சோகை:

இரத்த சோகை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் வறுத்த கொண்டைக்கடலை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது தவிர, கொண்டைக்கடலை பல நோய்களிலும் உங்களுக்கு நன்மைகளைத் தருகிறது. உங்கள் உணவில் கொண்டைக்கடலையைச் சேர்க்க வேண்டும். கொண்டைக்கடலையை தினமும் உட்கொண்டால், நமது ஆரோக்கியம் பெரிதும் பயன் தரும்.