Health Tips: தினமும் ஒரே ஒரு கிராம்பு மென்று சாப்பிட்டு பாருங்க.. இந்த பிரச்சனைகள் சரியாகும்..!
Eat One Clove Daily: தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இருமல், பல் பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால், அதிக அளவில் உட்கொள்வது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கிராம்பின் நன்மைகள்
நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு விஷயங்களை மேற்கொள்கிறோம். அதன்படி, காலையில் எழுந்து உடற்பயிற்சி (Exercise) செய்வது முதல் ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை (Healthy Foods) எடுத்து கொள்வது வரை கவனிப்புடன் இருக்கிறோம். இதில், நாம் எடுத்துகொள்ளும் உணவில் பல வகையான மசாலா பொருட்களும், நம் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சமைக்கும்போது அதில் கிராம்பு (Clove) பயன்படுத்துவோம். இவை பயன்படுத்தும்போது, வாசனை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் கூடுதல் சுவையையும் கொடுக்கும். அந்தவகையில், தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையை தரும். உதாரணத்திற்கு கிராம்பு அஜீரணத்தை நீக்கினாலும், அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றை சூடாக்கும். அதேபோல், கிராம்பை அதிகமாக உட்கொள்ளும்போது இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும். எனவே, தினமும் கிராம்பு சாப்பிடுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட கிராம்புகளை சாப்பிடக்கூடாது.
ALSO READ: சாப்பிட்ட உடனே ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? அப்படி என்ன செய்யும்..? விரிவான பார்வை!
தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இருமலை குணப்படுத்தும்:
கிராம்பு சாப்பிடுவதன் மூலம், தொண்டை புண், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். பலருக்கு நீண்ட நாட்களாக வறட்டு இருமல் பிரச்சனை இருக்கும். அந்தவகையில், கிராம்பை தொடர்ந்து உட்கொள்வது இந்த பிரச்சனையை பெருமளவில் நீக்க உதவுகிறது. மேலும், உங்களுக்கு இருமல் இருந்தால், கிராம்பு சாப்பிடுவதன் மூலம் அது குறையும்.
பல் பிரச்சனையை சரிசெய்யும்:
கிராம்பு பற்களுக்கும் நல்லது என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அதன்படி, கிராம்பை தினமும் மெல்லுவதன்மூலம் உங்கள் பற்களை வலுப்படுத்தும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவதன்மூலமும், வலி மற்றும் தொற்றுநோயிலிருந்து விலகி இருப்பீர்கள். கிராம்பு கொண்ட பல் துலக்கும் பேஸ்டை பயன்படுத்தலாம். உங்கள் பற்கள் அல்லது ஈறுகளில் வலி இருந்தால், கிராம்பு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது உதவும்.
வாய் துர்நாற்றத்தை நீக்கும்:
கிராம்பை மென்று சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். எனவே, உணவு சாப்பிட்ட பிறகு கிராம்பை மென்று சாப்பிடுவதால் உங்கள் வாயில் எந்த துர்நாற்றமும் இருக்காது. மேலும் கிராம்பை சாப்பிடுவது உணவு சிறப்பாக செரிமானம் அடையவும் உதவும். வயிறு உப்புசம் போன்ற பிரச்சனையை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள்.
கிராம்பு சாப்பிடுவது அஜீரணத்தைப் போக்க உதவும். வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை சரிசெய்யும். இருப்பினும், இதை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் கூடாது.
ALSO READ: ஒரு மாதம் அரிசி சாப்பிடாவிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
நோய் எதிர்ப்பு சக்தி:
கிராம்பு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் எடுத்துகொள்வது நல்லது. ஏனெனில், குளிர்காலத்தில் தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது சளி எளிதில் பிடிக்காமல் இருக்க உதவும். மேலும், உடலில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கிராம்பு நல்ல பலனை தரும். இருப்பினும், அதிகமாக உட்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும்.