Curd Safety: பழைய புளிப்பு தயிர் சாப்பிடுவது பாதுகாப்பானதா? தயிர் சாப்பிட சரியான வழி எது?
Spoiled Curd Dangers: ஷாலினி என்ற குர்கானைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு பழைய தயிர் சாப்பிட்டதால் உணவு விஷம் ஏற்பட்டது. 3-5 நாட்களுக்கு மேல் வைத்திருக்கும் தயிர் ஆபத்தானது. புளித்த தயிரை சாப்பிடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது அதன் நன்மைகளை குறைக்கிறது. 2-3 நாட்களுக்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தயிரை சாப்பிடுவது பாதுகாப்பானது.

குர்கானை சேர்ந்த ஐடி ஊழியரான ஷாலினி, வழக்கம்போல் தங்களது வீட்டில் தயார் செய்யப்பட்ட தயிரை (Curd) சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மருத்துவர்கள் (Doctor) அந்த பெண்மணியை சோதனை செய்தபோது, 3-4 நாட்கள் பழமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதை சாப்பிட்டதால், அவருக்கு ஃபுட் பாய்சன் (Food Poison) ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் பழைய மற்றும் புளிப்பான தயிர் சுவைக்காக தயாரிக்கப்படும். இருப்பினும், தயிர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. அதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
பழைய தயிர் தீங்கானதா..?
பெரும்பாலான இந்திய வீடுகளில் தயிர் முக்கிய உணவாக உள்ளது. இது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தருவதுடன் செரிமானத்திற்கு சிறந்தது. ஆனால், தயிரில் உள்ள அமிலத்தன்மை அளவு குறைந்தவுடன் தயிரில் உள்ள லாக்டோபாகிலஸ் ஃபோர்லி மற்றும் லிஸ்டீரியாவின் இன்பெருக்க இடமாக மாறுவதால், நீண்ட பழைய தயிரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகள்?




புளிப்பு தயிரை சாப்பிடக்கூடாதா..?
2 முதல் 3 நாட்களுக்கு மேல் ஆகாத, குறையாக குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட, சற்று புளிப்பான தயிர் பொதுவாக உட்கொள்வது பாதுகாப்பானது. 3-5 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட தயிரை உட்கொள்ளும்போது உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகிறார்கள். தயிர் அதிகமாக புளிப்பாக மாறி பூஞ்சை வளர்ச்சி அல்லது அம்மோனியா போன்றவை வளர்ந்து வாசனை வெளிப்பட்டால், அது கெட்டுபோனதை குறிக்கும். இத்தகைய தயிரை சாப்பிடுவது வயிற்று தொற்று, வீக்கம் அல்லது ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கும்.
சர்வதேச உணவு நுண்ணுயிரியல் இதழ் கடந்த 2020ம் ஆண்டு புளித்த பால பொருட்களின் நுண்ணுயிர் பாதுகாப்பை ஆராய்ந்தது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அறை வெப்பநிலையில் 24 மணிநேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்ட தயிரில், அமிலத்தன்மை அளவு குறைந்தவுடன் ஈ.கோலை மற்றும் லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன. குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தயிர் 3 நாட்கள் வரை பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இதன்பிறகு, தயிர் அதன் புரோபயாடிக் தரத்தை இழக்கத் தொடங்கியது. எனவே, பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து என இரண்டையும் பெற தயிரை 2-3 நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: Curd Vs Yogurt – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
சர்க்கரை மற்றும் உப்பு:
பெரும்பாலும் மக்கள் தயிரை சாதாரணமாக சாப்பிடுவதற்குப் பதிலாக உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த முறை தவறானது. தயிர் ஒரு புரோபயாடிக் உணவு, ஆனால் அதில் சர்க்கரை சேர்க்கப்படும்போது, அது அதன் நல்ல பாக்டீரியாக்களை பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக செரிமானம் பாதிக்கும்.
அதேநேரத்தில், உப்பு உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகிறது. கோடைகாலத்தில், தயிர் உடலை குளிர்விக்க உட்கொள்ளப்படுகிறது, ஆனால் உப்புடன் சாப்பிடுவது எதிர் விளைவை ஏற்படுத்தி உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், தயிரில் சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.