Yogi Babu: தளபதி விஜய் – அஜித் சாரிடம் நான் எப்போதும் அதை கேப்பேன் – யோகி பாபு பேச்சு!

Yogi Babu About Vijay And Ajith: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராகவும், காமெடியனாகவும் இருந்துவருபவர் யோகி பாபு. இவரின் நடிப்பில் கெணத்த காணோம் என்ற படமானது சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் குறித்து தெரிவித்துள்ளார்.

Yogi Babu: தளபதி விஜய் - அஜித் சாரிடம் நான் எப்போதும் அதை கேப்பேன் - யோகி பாபு பேச்சு!

விஜய், யோகி பாபு மற்றும் அஜித்

Updated On: 

13 Mar 2026 14:37 PM

 IST

நடிகர் யோகி பாபு (Yogi Babu) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், காமெடியனாகவும் இருந்துவருகிறார். இவரின் பிரபல தற்போது தமிழ் சினிமாவையும் கடந்து பாலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள சினிமா வரையிலும் பரவி உள்ளது. அந்த வகையில் இவருக்கு தமிழ் மொழியை கடந்து மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. மேலும் இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay), அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற நடிகர்களுடனும் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவருக்கு மக்கள் மத்தியிலும் பிரபலம் அதிகம். இவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் இன்று (13/03/2026) வெளியாகியுள்ள படம்தான் கெணத்த காணோம் (Kenatha Kanom).

இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் யோகி பாபு கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரிடம் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கேட்டது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் முதல் பாடல்.. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரிடம் சிபாரிசு செய்ய கேட்டது குறித்து யோகி பாபு பேச்சு:

அண்ட் நேர்காணலில் பேசிடிய யோகி பாபு, “நான் தளபதி விஜய் சார் ஒரு படம் கமிட்டானாலே, அவரிடம் சார் என்னை இந்த படத்தில் சிபாரிசு பண்ணுங்கனு போன் பண்ணி கேட்பேன். ஆனால் அவரு “எப்பா சொல்லுறேன் பா” என என்னிடம் சொல்லுவாரு. அதுபோல அஜித் குமார் சாரிடமும் கேட்டிருந்தேன். குட் பேட் அக்லி படம் நடிக்கும்போது அவரிடம் கேட்டிருந்தேன். அப்போதுதான் வெளிநாட்டில் நடக்கும் காட்சியில் யோகி பாபு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அஜித் சார் கூறினார். அதனால் அந்த படத்தில் எனக்கு அந்த காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!

கெணத்த காணோம் திரைப்படம் குறித்து யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

யோகி பாபு தொடர்ந்து புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தற்போது அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் AA22 படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறாராம். இதையடுத்து தெலுங்கிலும் சில முக்கியமான படங்களில் யோகி பாபு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
Anishima Anilkumar: தனுஷ் சாரின் பிக் ஃபேன்.. நேரில் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு – அனிஷிமா அனில்குமார்!
Rajendra Prasad: எம்ஜிஆர் குறித்துப் பேச எனக்கு தைரியம் இருக்கா? மன்னிப்புக்கேட்ட தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்!
Dhanush: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!
Trisha Krishnan: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!
OTT Release: இந்த வீக் எண்டில் ஓடிடியில் குவியும் திரைப்படங்கள்.. எந்த படத்தை நீங்கள் பார்க்கப்போறிங்க?
கோடைகாலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் - மருத்துவர்கள் ஆச்சரிய தகவல்
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..