சர்வைவரில் விட்டதை பிக்பாஸில் பிடிப்பாரா வி.ஜே.பார்வதி!

Bigg Boss Tamil 9: வீடியோ ஜாக்கியாக மக்களிடையே நன்கு பரிச்சையமானவர் பார்வதி. தொடர்ந்து பல பிரபலங்களைப் பேட்டி எடுத்து மக்களிடையே வைரலானவர் இவர். யூடியூப் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான விஜே பார்வதி தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

சர்வைவரில் விட்டதை பிக்பாஸில் பிடிப்பாரா வி.ஜே.பார்வதி!

வி.ஜே.பார்வதி

Published: 

05 Oct 2025 20:09 PM

 IST

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் விஜே பார்வதி (VJ Parvathy). இவர் தொலைக்காட்சியில் மட்டும் இன்றி தொடர்ந்து பல யூடியூப் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரை பேட்டி எடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பேட்டி மட்டும் இன்றி பல வைரலான விசயங்களை பேசி ரசிகர்களிடையே தன்னை எப்போதுமே நியாபகபடுத்திக்கொண்டே இருப்பார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் முன்னதாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்வார் என்று பல முறை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான ஆளாக விஜே பார்வதி இருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்து இருந்த விஜே பார்வதி முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கினார். இந்த போட்டி மன உறுதியையும் உடல் பலத்தையும் கொண்டு விளையாட வேண்டும். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை போல மைண்ட் கேம் விளையாட நினைத்த பார்வதி முன்னதாகவே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வைவரில் விட்டதை பிக்பாஸில் பிடிப்பாரா வி.ஜே.பார்வதி:

இந்த நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போல மைண்ட் கேம் விளையாடிய பார்வதி அந்த நிகழ்ச்சியில் இருந்து முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அவருடையை மைண்ட் கேமை வைத்து எத்தனை நாட்களுக்கு உள்ளே இருப்பார் என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இதனை ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே.பார்வதி குறித்த அறிமுக வீடியோவை வெளியிட்ட நிகழ்ச்சி குழு: