Vishwambhara : சிரஞ்சீவியின் பிறந்தநாள்.. வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் தமிழ் கிளிம்ப்ஸ் வீடியோ!

Visvambhara Movie Tamil Glimpse : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் இன்று 2025, ஆகஸ்ட் 22ம் தேதியில் தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, விஸ்வம்பரா படத்தின் தமிழ் டீசர் வெளியாகியுள்ளது.

Vishwambhara : சிரஞ்சீவியின் பிறந்தநாள்.. வெளியானது விஸ்வம்பரா படத்தின் தமிழ் கிளிம்ப்ஸ் வீடியோ!

விஸ்வம்பரா திரைப்படம்

Published: 

22 Aug 2025 15:27 PM

நடிகர் சிரஞ்சீவி (Chiranjeevi) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் ராம் சரணின் (Ram Charan) தந்தையும் கூட. இவரின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் விஸ்வம்பரா (Vishwambhara). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மல்லிடி வசிஷ்டா (Mallidi Vassishta) இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக இந்த படமானது உருவாக்கி வருகிறது. தற்போது இப்படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 22ம் தேதி, நடிகர் சிரஞ்சீவி தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று 2025, ஆகஸ்ட் 21ம் தேதி விஸ்வம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படக்குழு, விஸ்வம்பரா படத்தின் தமிழ் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மதராஸி படத்தின் இசை – ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

விஸ்வம்பரா படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ :

நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் இந்த விஸ்வம்பரா படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான யு.வி கிரியேஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், குணால் கபூர், ஆஷிகா ரங்கநாத், ராவ் ரமேஷ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் பாலிவுட் நடிகையும், நாகினி தொடர் புகழ் நடிகை மௌனி ராய் நடனமாடியுள்ளாராம். இந்த படமானது மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிவருகிறது.

இதையும் படிங்க : சூரியாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

விஸ்வம்பரா படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த விஸ்வம்பரா படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாம். இப்படமானது பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளதாம். ஆனால் இப்படத்தின் ரிலீஸ் குறித்துப் படக்குழு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்படமானது பேண்டஸி கதைக்களத்துடன் மாறுபட்ட படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.