நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்… விஷ்ணு விஷாலின் நெகிழ்ச்சிப் பதிவு

Irandu Vaanam Movie: தமிழ் சினிமாவில் பல வித்யாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்தது.

நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங்... விஷ்ணு விஷாலின் நெகிழ்ச்சிப் பதிவு

இரண்டு வானம்

Published: 

11 Jun 2025 16:00 PM

 IST

நடிகர் விஷ்ணு விஷாலின் (Actor Vishnu Vishal) நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் 150 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ராம் குமார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர் வெளியான போதே படம் வித்யாசமான கதை அம்சத்தை கொண்டுள்ளது தெரியவந்தது. ஃபேண்டசி ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ள இந்த இரண்டு வானம் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, இரண்டுவானம் படத்தின் கடைசி நாள் இன்று. 150வது நாள் படப்பிடிப்பு. நீங்களும் விரைவில் பெரிய திரையில் உணரக்கூடிய ஒரு அற்புதமான பயணம் இது. இயக்குநர் ராம்குமார் மீண்டும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான ஒன்றை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

விஷ்ணு விஷாலின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் ஹிட் அடித்தப் படங்கள்:

கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் விஷ்ணு விஷால். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, ராட்சசன்,FIR மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
OTT Movie: வயது மூத்த பெண்ணின் மீது ஆசைப்படும் பேய்.. விறுவிறுப்பாக இருக்கும் இந்த படத்தை பாத்திருக்கீங்களா? எந்த ஓடிடியில் இருக்கு தெரியுமா?
Mohanlal: இயக்குநர் பிரியதர்ஷனின் 100-வது திரைப்படத்தில் இணைந்த மோகன்லால் – வைரலாகும் பதிவு!
Sreeleela: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
RJ Balaji: கருப்பு பட கதையை முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னேன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி!
Marshal: மார்ஷல் பட ரிலீஸ் எப்போது? கதை இதுதான்! – இயக்குநர் தமிழ் கொடுத்த அப்டேட்!
Ashwath Marimuthu: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் எடுக்க காரணம் இதுதான் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..