விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

Irandu Vaanam Movie First Single Update: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவர் மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம்தான் இரண்டு வானம். இப்படம் விரைவில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விஷ்ணு விஷால் - மமிதா பைஜூவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? - படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

விஷ்ணு விஷால் - மமிதா பைஜூவின் இரண்டு வானம்

Updated On: 

24 Apr 2026 20:44 PM

 IST

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நடிப்பில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இறுதியாக ஆர்யன் (Aryan) என்ற படமானது வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படமானது உருவாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக பல படங்களில் நடித்துவந்தார். விஷ்ணு விஷாலின் நடிப்பில், பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படம் என்றால் அது ராட்ச்சன் (Ratsasan). இப்படத்தை இயக்குநர் ராம் குமார் (Ram Kumar) இயக்கியிருந்தார். அந்த வகையில் இந்த இயக்குநரின் இயக்கத்தில், விஷ்ணு விஷால் இரண்டாவதாக இணைந்துள்ள திரைப்படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இதை இயக்குநர் ராம் குமார் இயக்க, சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் (Dhibu Ninan Thomas) இசையமைத்திருக்கும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டுள்ளது. இரண்டு வானம் பட முதல் பாடல் “வெள்ளிச்சுடரே” (Vellichudare), வரும் 2026 ஏப்ரல் 25ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் ஜன நாயகன் படத்தின் லீக்: எடிட்டர் மீது நடவடிக்கை!

இரண்டு வானம் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு பதிவு:

இந்த இரண்டு வானம் படத்தில் நடிகை மமிதா பைஜூ கதநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஜன நாயகன், கர, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ரெபெல். இதில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தமிழில் 2வது ஒப்பந்தமான படம்தான் இரண்டு வானம். இதை ராட்ச்சன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கியுள்ள நிலையில், காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: போர் தொழில் படத்தை காட்டிலும் கர படம் வித்தியாசமாக இருக்கும் – மமிதா பைஜூ!

இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மதத்திற்கு வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழு இருக்கும் நிலையில், முதல் பாடல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் அடுத்தடுத்த பாடல்கள் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..