விஷ்ணு விஷால் – மமிதா பைஜுவின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Irandu Vaanam Movie Release Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு வானம் படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இரண்டு வானம்
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெறுவது போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியான ஆர்யன் மற்றும் ஓஹோ எந்தன் பேபி ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ஓஹோ எந்தன் பேபி படத்தினை தயாரித்தது மட்டும் இன்றி அதில் கேமியோ வேடத்திலும் நடிகர் விஷால் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இரண்டு வானம், மோகன்தாஸ் மற்றும் கட்டா குஸ்தி பாகம் 2 படங்கள் உருவாகி வருகின்றது. இதில் தற்போது இரண்டு வானம் படம் முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கோடையில் வெளியாகும் இரண்டு வானம் படம்:
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நாயகனாகவும் நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் நடித்துள்ள இந்த இரண்டு வானம் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் ராம் குமார் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு வானம் படம் வருகின்ற கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இரண்டு வானம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When it rains and shines at once…
you know it’s not just one sky ❤️ #IranduVaanam – Releasing this SUMMER in theatres!Starring @TheVishnuVishal @_mamithabaiju.
A film by @dir_ramkumar.
A @dhibuofficial Musical. @SathyaJyothi @arjun1on @Dinesh_K_Babu @Sanlokesh… pic.twitter.com/RTp2jn4pI8— Sathya Jyothi Films (@SathyaJyothi) April 6, 2026
Also read… Pallichattambi: ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்!