மகுடம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட விஷால்!

Magudam Movie Release Update: நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மகுடம். இந்தப் படத்தை அவரே இயக்கி வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

மகுடம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட விஷால்!

மகுடம்

Updated On: 

01 Jan 2026 17:32 PM

 IST

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விஷால். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே நடிகர் விஷால் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளதால் இவரை ஆக்‌ஷன் நாயகன் என்று ரசிகர்கள் அழைத்தனர். அதன்படி இவரை புரட்சி தளபதி என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் ஆக்‌ஷன் கதைகளை மையமாக வைத்து படங்களில் நடித்தார். அதன்படி இவர் ஆக்‌ஷன், ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து நடித்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவரது நடிப்பில் வெளியான திமிரு, தாமிரபரணி, சத்யன், தோரணை, அவன் இவன், பூஜை, ஆம்பள என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுதுள்ளார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தினை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மகுடம்.

மகுடம் படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த நிலையில் இந்தப் படத்தை நடிகர் விஷால் தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற கோடை விடுமுறையில் வெளியாகும் என்று இன்று புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஷால் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… முத்து பட வீடியோ உடன் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்… வைரலாகும் பதிவு!

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Related Stories
2025 ஆம் ஆண்டு பதிவான மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்று.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..
வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?