நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Love Marriage Movie: தமிழ் சினிமாவின் மூன்றாவது தலைமுறையாக நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது தாத்தா சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். அதனைத் தொடர்ந்து தந்தை பிரபு நாயகனாகவும் குணச்சித்திர நடிகனாகவும் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது விக்ரம் பிரபு தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

லவ் மேரேஜ்

Updated On: 

06 Jun 2025 21:38 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக சினிமா முழுவதுமே வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவிலும் பலர் தற்போது நடிகர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விக்ரம் பிரபு தற்போது மூன்றாவது தலைமுறையாக கோலிவுட் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu). இவரது தாத்தா பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேஷன். இவரது தந்தை நடிகர் பிரபு ஆவார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இல்லை என்றாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்தின் வெளியீட்டு தேதி அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிகின்றது.

நடிகர் விக்ரம் பிரபு தற்போது இயக்குநர் சன்முக பிரியன் இயக்கத்தில் நடித்துள்ளார். லவ் மேரேஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கஜ ராஜ், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லவ் மேரேஜ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்டில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விக்ரம் பிரபு நடிப்பில் ஹிட் அடித்த படங்கள்:

நடிகர் விக்ரம் பிரபு 2012-ம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் நாயகனாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி, சத்ரியன், வானம் கொட்டட்டும், புலிகுத்தி முருகன், டானாக்காரன், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இது மலையாள சினிமாவில் வெளியான ஒரு ரியல் ஸ்டோரி… பார்வதி நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய டேக் ஆஃப் படம்!
Mari Selvaraj: பைசன் படத்தில் அனுபமாவுக்கும் துருவுக்கும் வயது வித்தியாசத்துக்கு காரணம் இதுதான் – மாரி செல்வராஜ்!
Dhruv Vikram: மாரி செல்வராஜ் நடித்து காட்டுவதில் ஒரு வலி தெரிந்தது.. பைசன் படத்திற்கு பின் எல்லாம் மாறிடுச்சு – துருவ் விக்ரம் பேச்சு!
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்
129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்
31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!