Vijay Sethupathi: துணை நடிகர் டூ பிக்பாஸ் தொகுப்பாளர்.. விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை

Makkal Selvan To Bigg Boss Host: கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இத்தனை வளர்ச்சியின் காரணம் என்ன பற்றி விவரமாக பார்க்கலாம்.

Vijay Sethupathi: துணை நடிகர் டூ பிக்பாஸ் தொகுப்பாளர்.. விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை

விஜய் சேதுபதி

Published: 

05 Oct 2025 12:47 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் முன்னணி நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) திரைப்படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்திருந்தது. இவ்வாறு ஆண்டுதோறும் ஒரு அல்லது 2 படங்களை ஹிட் கொடுத்து வருகிறார். மேலும் இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் தொகுத்து வருகிறார். கடந்த 2017ம் அன்டு முதல் தமிழில் தொடங்கிய பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் (Kamal haasan) தொகுத்து வழங்கினார்.

அவர் சில காரணங்களால இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 8 முதல் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார். இவ்வாறு சாதாரண நடிகர்க இருந்து, பிக் பாஸ் தொகுப்பாளரான வளர்ச்சி பற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஜெயிலர் 2 பற்றி பேசி பில்டப் செய்ய விரும்பல.. நெல்சன் திலிப்குமார் அதிரடி!

பிக் பாஸ் தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் வளர்ச்சி :

சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துவந்தவர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் சிறு வேடத்தில் நடிக தொடங்கி, ஹீரோ மற்றும் வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் தளபதி விஜயுடன் படங்களில் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியை, தமிழ் மக்களுக்கு அடிமட்டத்தில் இருந்தே தெரியும். மக்களின் கண்முன்னே ஒவ்வொரு படத்தின் மூலம் வளர்ந்த நடிகராகவே விஜய் சேதுபதியை பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகியுள்ள மதராஸி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

அந்த வகையில் மக்களுக்கு மிகவும் தெரிந்த நபராகவும் மற்றும் எந்தவித எதிர்ப்புகளும் இல்லாத நடிகராகவும் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். இதன் காரணமாகாவே இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆக்குவதற்கு ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். இவ்வாறு மக்களிடையே பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 8 மூலம் கலவையான விமர்சனங்கள் இருந்தது. அந்த விமர்சனங்களை எல்லாம், இந்த பிக் பாஸ் சீன 9 நிகழ்ச்சியின் மூலம் தகிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ பதிவு :

இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது இன்று 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், இயக்குநர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.