தனுஷ் மருமகனின் புதுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போடரை வெளியிட்ட விஜய் சேதுபதி
Vijay Sethupathi Launching the First Look posters of Love Oh Love Movie : நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.

லவ் ஓ லவ்
தமிழ் சினிமாவில் வாரிசுகளாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே தற்போது உள்ளது. இது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் சினிமாவில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் பவிஷ் தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக கலம் இறங்கியுள்ளார். இவரது தாத்தா கஸ்தூரி ராஜா தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். இவர்தான் சினிமாவில் அவர்களின் குடும்பத்தில் இருந்து வந்த முதல் தலைமுறை. அதனைத் தொடர்ந்து பவிஷின் தாய் மாமன்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து ஒன்றாக தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகம் ஆனார்கள். இயக்குநராகவும் நடிகராகவும் இவர்கள் இரண்டாவது தலைமுறையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தனர். கஸ்தூரி ராஜாவின் மகள் வழிப் பேரனாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் பவிஷ்.
இவர் நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இளம் தலைமுறையினரின் காதல் கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பவிஷ் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
பவிஷின் புதுப் பட ஃபர்ஸ்ட் லுக் போடரை வெளியிட்ட விஜய் சேதுபதி:
நடிகர் பவிஷ் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்திற்கு லவ் ஓ லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். இதில் நாயகியாக நடிகை நாக துர்கா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஏப்ரல் மாதம் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது த்ரிஷ்யம் 3 படம் – மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Launching the First Look posters of #LoveOhLove ✨
Best wishes to the team #LOL @Zinema_media @CreativeEnt4 @dhananjayang @thinkmusicindia @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG @srikanth_nb @foxnmusic @Harshika_Ramesh @Dstudiospost @ddstudiossocial @ProRekha… pic.twitter.com/QW1IbpiV3R
— VijaySethupathi (@VijaySethuOffl) March 25, 2026
Also Read… நூறு சாமி படத்திலிருந்து நாளை வெளியாகும் மாய கனவோ பாடல்