ஐயா எப்படியாவது இத ஹிட் படமா கொடுங்கனு விஜய் சேதுபதி சொன்னார்… தலைவன் தலைவி இயக்குநர் சொன்ன விசயம்!

Director Pandiraj: நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தின் தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன்னிடம் என்ன கூறினார் என்பது குறித்து இயக்குநர் பாண்டிராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஐயா எப்படியாவது இத ஹிட் படமா கொடுங்கனு விஜய் சேதுபதி சொன்னார்... தலைவன் தலைவி இயக்குநர் சொன்ன விசயம்!

தலைவன் தலைவி படக்குழு

Published: 

18 Aug 2025 12:45 PM

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்குவதில் தமிழ் சினிமாவில் புகழ்ப் பெற்றவர். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல இந்தப் படமும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த தலைவன் தலைவி படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து இருந்தார்.

தொடர்ந்து கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல் மற்றும் கூடல் அவர்களின் குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பந்தம் மற்றும் பகை என சமூகத்தில் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்வங்களை மையமாக வைத்து எதார்த்தமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நேற்று ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு படக்குழு படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடியது. படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வருகின்ற 22-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிராஜினிடம் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை:

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அதன்படி படத்தின் தொடக்கத்தில் இந்த கதையைக் கேட்ட நடிகர் விஜய் சேதுபதி எப்படியாச்சும் இதனை ஹிட் படமாக கொடுத்துடுங்க என்று எண்ணிடம் கூறினார். நான் ஹிட் படமா ப்ளாக் பஸ்டர் படமாக கொடுக்க நான் ப்ளான் பண்ணிட்டு இருக்கேன் என்று விஜய் சேதுபதியிடம் கூறியதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக தலைவன் தலைவி இருக்கும் என்று நான் அவரிடம் உறுதியளித்தேன். அதன்படி இந்தப் படமும் அதிக வசூலைப் பெற்றப் பிறகு விஜய் சேதுபதி மாலையுடன் என் அலுவலகம் வந்து சொன்னதை செய்துவிட்டீர்கள் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீனாட்சி சௌத்ரியின் போட்டோஸ்!

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கும் மாமன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!