டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2

Viduthalai Part 2 OTT Update: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் திரையரங்குகளில் 20-ம் தேதி டிசம்பர் மாதம் 2024-ம் ஆண்டு வெளியான படம் விடுதலை பாகம் இரண்டு. இந்தப் படத்தின் டைரக்டர்ஸ் கட் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2

விடுதலை பாகம் 2

Published: 

06 Jun 2025 17:59 PM

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசியல் க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாந்து விடுதலை பாகம் 1. கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் முன்னணி வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் சூரி நாயகனாக அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரியை இயக்குநர் வெற்றிமாறன் தான் நாயகனாக அறிமுகம் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் உடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, சேத்தன், மூணார் ரமேஷ், மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன் மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் நடித்துளனர்.

விடுதலை முதல் பாகத்தில் கதை:

காவல் துறையில் கடை நிலை ஊழியராக பணியில் சேர்கிறார் நடிகர் சூரி. மேலும் மக்களுக்காக போராடும் போராட்டக்குழு தலைவராக நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். முதல் பாகத்தில் நடிகர் சூரியை சுற்றியே படம் நகரும். அவரை நாயகனாக பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் காவல் துறையில் கடை நிலை ஊழியராக இருக்கும் சூரி போராட்ட குழு தலைவர் விஜய் சேதுதியை கைது செய்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது இரண்டாம் பாகத்தில் காட்டப்படுகின்றது.

விடுதலை இரண்டாம் பாகத்தின் கதை:

முதல் பாகத்தில் கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதியை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார்கள். அவர்களுக்கு மலை வழியாக நடிகர் சூரி வழிகாட்டி கூட்டிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தப் பயணத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர் ஏன் போராட்ட குழு தலைவராக மாறினார் என்பது குறித்து அந்த காவலர்களிடம் கூறி வருகிறார்.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த சூரி அவருக்கு உதவ நினைக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. முன்னதாக படம் டைரக்டர் கட்டுடன் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது திரையரங்குகளில் வெளியான பகுதி மட்டுமே வெளியாகி இருந்தது.

வைரலாகும் ஓடிடி அப்டேட்:

இந்த நிலையில் தற்போது படக்குழு டைரக்டர்ஸ் கட் உடன் படத்தை ஓடிடியில் வெளியிட்டுள்ளது. அதன்படி படம் திரையரங்குகளில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் திரையிடப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் 3 மணி நேரம் 7 நிமிடங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.