கரூர் சம்பவம்… விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!

Actor Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்படி இன்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் அறிவிப்பை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்து இருந்த நிலையில் கரூரில் நடந்த சம்பவம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம்... விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!

விஜய் சேதுபதி

Published: 

28 Sep 2025 14:56 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியானதால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி விஜய் சேதுபதியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து நடிகை தபு முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு:

இந்த நிலையில் இன்று 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் பரப்புரையில் பலர் எதிர்பாராதவிமாக உயிரிழந்தனர். இந்த துயரம் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளனது. இதன் காரணமாக இன்று வெளியாக இருந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டிலை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் – வைரலாகும் போட்டோ!

பூரி ஜெகன்நாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் – வைரலாகும் போஸ்ட்