Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் டீசர் அப்டேட் இதோ!

Puri Sethupathi Movie Update: சினிமாவில் மக்கள் மனதில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக நுழைந்துள்ளார். இந்த படமானது தற்காலிகமாக பூரிசேதுபதி என அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் டீசர் அப்டேட் இதோ!

பூரி சேதுபதி பட டைட்டில் டீசர் அப்டேட்

Published: 

26 Sep 2025 13:36 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படமானது கடந்த 2025 ஜூலை 25ம் தேதியில் வெளியாகி, சுமார் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து புதிய படங்களிலும் இவர் ஒப்பந்தமாகி வருகிறார்.. அந்த வகையில், தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதன் படத்தின் மூலமாகத்தான் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். மேலும் ஏற்கனவே தெலுங்கில் வில்லனாக படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகிவரும் இப்படமானது தற்காலிகமாக பூரிசேதுபதி (Purisethupathi) என அழைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் 2025 செப்டம்பர் 28ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பல்டி’ படத்திற்காக சாய் அபயங்கர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பூரிசேதுபதி திரைப்படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்து வெளியான பதிவு :

இந்த படத்தின் டைட்டில் டீசர் இயக்குநரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 2025 செப்டம்பர் 28ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அஜித் குமாரின் AK65 படத்தின் இயக்குநர் இவரா? அப்போ ஹிட்டு நிச்சயம்

இந்நிலையில், இது தொடர்பான போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், அதில் பிச்சைக்காரர் போல ஒரு நபர் நிற்பது போல உள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணி :

இந்த படமானது கடந்த 2025 மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். மேலும் நடிகை தபு இப்படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 75 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2025 டிசம்பர் அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்ட வருவதாக கூறப்படுகிறது.