Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் என்ன தெரியுமா?

Vijay Sethupathi And Puri Jagannath Team Up Movie : இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது. மேலும் விஜய் சேதுபதியின் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 17:23 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி (Vijay Sethupati). இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகிப் பல படங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). இந்த படத்தைக் கோலிவுட் இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷ்ன், சூதாட்டம் மற்றும் டைமிங் காமெடி என மிகவும் பிரம்மாண்டமாக இந்த ஏஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மட்டும் தமிழில் அடுத்தடுத்த 3 படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியிலிருந்து வருகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் கதாநாயகனாகப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannath) இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, மார்ச் மாதத்தில் தெலுங்கு வருடப் பிறப்பின்போது விழாவின் போது அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும் தற்போது இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்த படத்திற்குப் படக்குழு “பவதி பிக்ஷாம் தேஹி”  (Bhavathi Bhiksham Dehi) என்ற டைட்டிலை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. படத்தின் டைட்டில் பற்றிப் படக்குழு விரைவில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தை நடிகையும் தயாரிப்பாளருமான சார்மி கவூர் தயாரித்து வருகிறார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை, ரக்ஷனா, டச் மீ நாட் போன்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் மஹதி ஸ்வர சாகர் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் நேரு எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஸ் படம் தோல்வியா வெற்றியா ?

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி அதிரடி கதாநாயகனாக நடித்திருந்த படம் ஏஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகப் பிரபல நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார் மேலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது ஆக்ஷ்ன், டைமிங் நகைச்சுவை மற்றும் சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் ரிலீசிற்கு முன் படக்குழு சரியான ப்ரோமோஷன் செய்யாத காரணத்தால் இப்படம் ரிலீசானதே பல ரசிகர்களுக்கு தெரியவில்லை. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருந்தார். சுமார் ரூ. 35 கோடியில் உருவான இப்படம் மொத்தமாக வெறும் ரூ. 7.65 கோடிகள் மட்டும்தான் வசூல் செய்து, தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை.. விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்ட கேள்வி!
திருமண வாழ்க்கை.. விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்ட கேள்வி!...
டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
டீயுடன் இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
அந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் - சரண்யா பொன்வண்ணன்!
அந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கமாட்டேன் - சரண்யா பொன்வண்ணன்!...
No Added Sugar VS Sugar Free - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
No Added Sugar VS Sugar Free - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?...
சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி...
வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. விஜய் வருத்தம்!
வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.. விஜய் வருத்தம்!...
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க...
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி...
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!...
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!...