Simran: மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!
Simrans Instagram Post Goes Viral : தென்னிந்திய பிரபல நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன். இவரின் நடிப்பில் மற்றும் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை வெற்றியை தொடர்ந்து, நடிகை சிம்ரன் சமீபத்தில் தனது மூத்த மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சிம்ரன் (Simran). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. 2000ம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட் நடிகையாக வலம்வந்த இவர் அஜித் குமார் (Ajith Kumar ) முதல் விஜய் (Vijay) வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் திருமணத்திற்குப் பின் நடிகையாகப் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். மேலும் இவர் சிவகார்த்திகேயனின் சீமராஜா (Seema Raja) படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் அதைத் தொடர்ந்து இவர் இறுதியாக ஹீரோயினியாக நடித்த படம் டூரிஸ்ட் பேமிலி (Touris Family).
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் பல வருடங்களுக்குப் பின் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இலங்கை தமிழராக வேடத்தில் நடித்திருந்தார்.




இப்படமானது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை சிம்ரனின் மூத்த மகன் அதீப் பக்கா என்பவர் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சிம்ரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை சிம்ரனின் குடும்பம் :
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த சிம்ரன், கடந்த 20003ம் ஆண்டு தனது நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான தீபக் பக்கா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளது, முதல் மகன் பெயர் அதீப் பக்கா மற்றும் இரண்டாவது மகன் பெயர் அதிதி பக்கா என்பதாகும்.
தனது இரு மகன்களில் புகைப்படங்களை அவ்வப்போது நடிகை சிம்ரன் பதிவிடுவார். இந்நிலையில் சமீபத்தில் சிம்ரனின் மூத்த மகனான ஆதீப் பக்கா பள்ளியில் பட்டம் பெற்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து நடிகை சிம்ரன் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
சிம்ரனின் டூரிஸ் பேமிலி பட வெற்றி :
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார், இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். இப்படமானது இலங்கைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி வெளியாகியிருந்தது. இப்படத்தில் சிம்ரன் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். கடந்த 2025, மே 1ம் ஹிந்தியில் எளியோன் இப்படம் ரெட்ரோ, ஹிட் 3 போன்ற பிரம்மாண்ட படங்களுடன் வெளியாகியது.
சுமார் ரூ 8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் ரூ. 75 கோடிகளைப் பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் தனது தயாரிப்பில் தி லாஸ்ட் ஒன் என்ற படத்தில் நடித்தும் தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் அறிவிப்புகளும் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தில் இந்த 2025ம் ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.