33 ஆண்டுகளை நிறைவு செய்தது நாளைய தீர்ப்பு படம்… கொண்டாடும் விஜய் ரசிகர்கள்
33 Years Of Naalaiya Theerpu Movie: தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக அறிமுகம் ஆன படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

நாளைய தீர்ப்பு படம்
தமிழ் சினிமாவில் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி 1992-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நாளைய தீர்ப்பு. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா, ராதா ரவி, வினு சக்கரவர்த்தி, கௌதம் சுந்தரராஜன், கே.ஆர்.விஜயா, சரத் பாபு, தாமு, ஸ்ரீநாத், மன்சூர் அலி கான், மேஜர் சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.சந்திரன், ஜெய் கணேஷ், பாண்டு, தட்டச்சர் கோபு, எஸ்.என். சுரேந்தர், கே.எஸ்.ஜெயலட்சுமி, சாப்ளின் பாலு, கவிதா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை வி.வி.கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சோபா சந்திரசேகர் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு மணிமேகலை ஸ்ரீலேகா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது.
Also Read… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி… இணையத்தில் கசிந்த தகவல்
33 ஆண்டுகளை நிறைவு செய்தது நாளைய தீர்ப்பு படம்:
இயக்குநரின் மகனாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நாயகனாக அறிமுகம் ஆன இந்தப் படத்தில் தனது தாயை விட்டுவிட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார். இதனால் தனது தந்தையை பெரியவனாகி தட்டிக் கேட்பார் விஜய். ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் விஜயின் முதல் படம் என்பதால் விமர்சன ரீதியாக பலருக்கு பிடித்து இருந்தாலும் சிலர் அவரது தோற்றத்தை வைத்து கிண்டலடிக்கவும் செய்தனர். பின் நாட்களில் தன்னை கிண்டல் செய்தவர்களையும் தனக்கான ரசிகர்களாக மாற்றும் அளவிற்கு கடின உழைப்பை நடிகர் விஜய் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தொடர் மழை காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த லாக்டவுன் படக்குழு!