Vijay Antony: மீண்டும் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி.. வெளியானது ‘நூறு சாமி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Nooru Saami Movie First Look: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் நூறு சாமி. இந்த படத்தின் முதல் பார்வையை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து, தற்போது முன்னணி கதாநாயகனாக படங்களில் நடித்துவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான நான் (Naan) என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். தற்போதுவரை இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 25 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இவரின் 25வது படமாக இறுதியாக சக்தித் திருமகன் (Sakthi Thirumagan) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி அரசியல் கதையில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்து இவர் நடித்துவந்த படம்தான் “நூறு சாமி” (Nooru Saami). இதை இயக்குநர் சசி (Sasi) இயக்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.
இப்படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துவருகிறார். அந்த வகையில் இப்படத்தின் முதல் பார்வையை இன்று (16/03/2026) இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இத முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: 20 வயது வித்தியாசத்திலும் காதல்… வெளியானது சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர்!
நடிகர் விஜய் ஆண்டனியின் நூறுசாமி படத்தின் முதல் பார்வை குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
A journey of blood, sweat and bonds. This is the life they lived.#Noorusaami – A #FamilyBiopic@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel @Sakthi_Raj7 @kavyaanil_ @padinekumar_ofl #Bucks @VinodhiniUnoffl @dhivakargj pic.twitter.com/kcHikHkkue
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) March 16, 2026
நூறு சாமி படம் எப்போது வெளியாகும்:
இந்த நூறு சாமி படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இதையடுத்து சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தை இயக்கியும் அடுத்தடுத்த ஹிட்டை கொடுத்தார். அந்த வகையில் இவர் மீண்டும் விஜய் ஆன்டனியுடன் 2வது முறை இணைந்த படம்தான் நூறு சாமி. இப்படமானது அம்மா மற்றும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் மற்றும் விவசாயம் குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம்.
இதையும் படிங்க: அரசன் பட கதைதான் வெற்றிமாறனின் ஃபர்ஸ்ட் ஸ்டோரியா? – இயக்குநர் ராம் சொன்ன விஷயம்!
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். இவர் ஜெய் பீம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் ஸ்வாசிகா, அஜய் திஷன் மற்றும் சக்தி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை படக்குழு வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பையும் விஜய் ஆண்டனி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.