Vignesh Shivan : முதல் சந்திப்பு.. கண்ணீர் விடாமல் இருக்கமுடியவில்லை தலைவா! – வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

Vignesh Shivan Instagram Post Viral : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் விக்னேஷ் சிவன். இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்தை முதன்முறையாகச் சந்தித்தது குறித்தும், அவரின் 50 வருட சினிமா பயணம் குறித்தும் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vignesh Shivan : முதல் சந்திப்பு.. கண்ணீர் விடாமல் இருக்கமுடியவில்லை தலைவா! - வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

விக்னேஷ் சிவன் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

14 Aug 2025 23:23 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்திருந்தனர். இதை அடுத்ததாக நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 50வருட சினிமா பயணம் குறித்தும், மேலும் அவரை முதன் முறையாக சந்தித்த தருணம் குறித்தும், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ” முதல் முறை உங்களைச் சந்தித்தபோது, என்னால் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை தலைவா” என அவர் அதில் எழுதியுள்ளார். மேலும் அவர் கூறியது பற்றிப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : விக்ரமில் ரோலக்ஸ் போல.. கூலியில் வரவேற்பைப் பெற்றதா ஆமிர்கானின் கதாபாத்திரம் ?

ரஜினிகாந்த் குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

இந்த பதிவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், ரஜினிகாந்தை முதன் முறையாகச் சந்தித்தது குறித்தது எழுதியுள்ளார். அதை அடுத்ததாக அவர், “இந்த திரைத்துறையில் அனைவருமே உங்களை நேசிக்கிறார்கள். இதற்குக் காரணம் நீங்கள் உண்மையிலே ஒரு நல்ல மனிதர் என்பதால் மட்டுமே.

இதையும் படிங்க : தென்னிந்தியப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – பூஜா ஹெக்டே பேச்சு!

ஒரு ஸ்டாராக இருப்பது மற்றும் நீங்கள் ஒரு மனிதனாக இருப்பதை நியாயப்படுத்துகிறது. 50 வருடப் பொழுதுபோக்கு, 50 வருட ஸ்டைல் மற்றும் 50 வருட உங்களின் அன்புள்ள ரசிகர்களிடம் இருக்கும் கிடைக்கும் அன்பு. இவையெல்லாம் உங்களுக்கு என்றென்றும் தொடரட்டும்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அந்த பதிவில் எழுதியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனின் புதிய படம் :

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இந்த படமானது சைன்ஸ் பிக்ஷ்ன் கதைக்களம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.