லோகேஷ் கனகராஜின் ’29 தி பிலிம்’ ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!

29 The Movie Release Date Confirmed: இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பிலும் உருவாகிவந்த திரைப்படம்தான் 29. இதில் ரெட்ரோ பட வில்லன் விது ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நிலையில், இப்படமானது எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் 29 தி பிலிம் ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!

29 திரைப்படம்

Updated On: 

20 Apr 2026 20:46 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் மற்றும் எழுத்தாளராக இருந்துவருபவர் ரத்ன குமார் (Rathna Kumar). இவர் தமிழில் மேயாத மான் (Meyaadha Maan), ஆடை (Aadai), குளு குளு (Gulu Gulu) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த விதத்தில் கிட்டத்தட்ட 3 அனைத்துக்கும் மேலாக எந்த படங்களையுமே இவர் இயக்கவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kaganaraj) பணியாற்றும் படங்களில், எழுத்தாளராக பணியாற்றிவந்தார், இவர் லோகேஷின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். இந்த படத்தில் ஹீரோவாக, சூர்யாவின் ரெட்ரோ படத்தில் வில்லனாக நடித்த விது (Vidhu) 29 தி பிலிம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக அயோத்தி மற்றும் கிஸ் படங்களில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்திற்கு 29 என படக்குழு டைட்டில் வைத்திருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படமானது வரும் 2026 மே 8ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜின் 29 தி பிலிம் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு வீடியோ:

இப்படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ள நிலையில், சிறப்பாக வந்துள்ளது. இப்படமானது ஒரு 29 வயது இளைஞனுக்கு வரும் காதல் மற்றும் அவரின் வாழ்க்கையில் வேலைத் தேடி அவர் அலையும் கஷ்டங்கள் குறித்த கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளதாம். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தய் இயக்கியுள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: அந்த காட்சியை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது.. ஜி.வி.பிரகாஷை பாராட்டி தனுஷ் வெளியிட்ட பதிவு!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைத்திருக்கும் நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது வித்தியாசமான கதைக்களத்தில் அமைத்துள்ள நிலையில், நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகிறது. வரும் 2026 மே 8ம் தேதியில் இப்படமானது வெளியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ட்ரெய்லர் அப்டேட்டும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..