Vetrimaaran : பொல்லாதவன் படத்தின்போதே முடிவு செய்தேன்.. சிம்புவுடன் பணியாற்றுவது பற்றி வெற்றிமாறன் பேச்சு!

Vetrimaarans STR49 : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில், தற்போது சிலம்பரசனின் STR 49 படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில், சிலம்பரசனுடன் பணியாற்றவேண்டும் என்ற முடிவை பற்றி வெற்றிமாறன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

Vetrimaaran : பொல்லாதவன் படத்தின்போதே முடிவு செய்தேன்.. சிம்புவுடன் பணியாற்றுவது பற்றி வெற்றிமாறன் பேச்சு!

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன்

Updated On: 

14 Sep 2025 17:58 PM

 IST

கோலிவுட் சினிமாவில் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை, பல்வேறு பிரபலங்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருப்பவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில், தமிழில் இறுதியாக விடுதலை பாகம் 2 (Viduthalai Part 2) படமானது வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் STR49 படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் சிலம்பரசன், அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், மேலும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் தொடர்ப்பார் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் வெற்றிமாறன்.

அந்த நிகழ்ச்சியில், அவர் சிலம்பரசனுடன் பணியாற்ற எடுத்த முடிவு குறித்து பேசியுள்ளார். மேலும் இந்த முடிவு சுமார் 17 வருடங்களுக்கு முன்னே எடுத்ததாகவும், வெற்றிமாறன் கூறியிருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : தனது 2-வது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் போட்டோஸ்

சிலம்பரசனுடன் பணியாற்றவேண்டும் என்ற முடிவு பற்றி வெற்றிமாறன் :

அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், “பொல்லாதவன் படத்தின் டைமில் இருந்தே நானும், சிலம்பரசனும் நிறைய டிஸ்கஸ் பண்ணிருக்கோம். அவர் காளை படத்திற்காக ஜி.வி. பிரகாஷின் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். அப்போது நாங்கள் முவரும் பேசுவோம். அப்போதே நாங்கள் இந்த வட சென்னை படத்தின் கதையை பற்றி பேசியிருக்கிறேம்.

இதையும் படிங்க : நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்

வடசென்னை படத்தின் கதையில் சிலம்பரசன் இணைந்து நடிப்பதை பற்றியும் பேசியிருக்கிறோம். அப்போது இருந்தே சிலம்பரசனுடன் படம் பண்ணவேண்டும் என்று ஆசை இருந்தது. அதை தொடந்து தற்போது அந்த படமானது தற்போது நடைபெறவுள்ளது” என்று இயக்குனர் வெற்றிமாறன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

வெற்றிமாறன் பேசிய வீடியோ பதிவு :

STR 49 படத்தின் டீசர் வீடியோ எப்போது வெளியீடு :

சமீபத்தில் வெற்றிமாறனின் பிறந்தநாளை ஒட்டி, சிலம்பரசனின் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. அதை தொடர்ந்து, இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகவும் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் சில சிக்கலின் காரணாமாக இன்னும் அது நிலுவையில் இருப்பதாகவும், விரைவில் அது குறித்த தகவல் வெளியாகும் எனறும் வெற்றிமாறன் பேசியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.