நா.முத்துக்குமார் கவிதை… சூரி ஹீரோ…. அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

"Vetrimaaran Adapts Na. Muthukumar’s Poem : யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குநர் ராம் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பேட்டியளித்தனர். அப்போது வெற்றிமாறன் அடுத்ததாக நா.முத்துக்குமாரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு சூரி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

நா.முத்துக்குமார் கவிதை... சூரி ஹீரோ.... அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

நா.முத்துக்குமார் - சூரி - வெற்றிமாறன்

Published: 

28 Jun 2025 21:53 PM

 IST

சிவா (Shiva), கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பறந்து போ (Paranthu Po). இந்தப் படத்தை ஹாட் ஸ்டார், செவன் சீஸ் அண்ட் செவன் ஹீல்ஸ் புரொடக்சன்ஸ், ஜிகேஎஸ் பிரோஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராம் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வருகிற ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ராம் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் எஸ்எஸ் மியூசிக் யூடியூப் பக்கத்தில் இயக்குநர் ராமுடன் வெற்றிமாறனும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நா.முத்துக்குமாரின் கவிதை அடிப்படையில் தான் இயக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் (Vetrimaaran) பேசியிருந்தார்.

எஸ்.எஸ்.மியூசிக்கில் இயக்குநர் ராம் மற்றும் வெற்றிமாறனும் இணைந்து பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர், வெற்றிமாறனிடம், நீங்கள் இப்படி சிரிப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்கிறார். அதற்கு ராம், வெற்றி மாறனிடம், நா.முத்துக்குமாரின் கவிதையை படமாக இயக்கியிருந்தீர்கள் என்றால் இந்த கேள்வி வந்திருக்காது என்கிறார். அவருக்கு பதிலளிக்கும் வெற்றிமாறன், அந்தக் கதையை சூரியை வைத்து படமாக்கவிருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்

நா.முத்துக்குமாரின் கவிதை –  சூரியை வைத்து இயக்கவிருப்பதாக அறிவித்த வெற்றிமாறன்

 

சிம்பு படத்தை அறிவித்த வெற்றிமாறன்

கடந்த சில வாரங்களாக சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் சிம்பு நடிப்பில் வட சென்னை படத்தின் பின்னணியில் வெற்றிமாறன் படம் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக அறிவிப்பு வீடியோவும் படமாக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ராமுடன் அளித்த பேட்டியில் வெற்றிமாறன் இதனை உறுதி செய்திருக்கிறார்.

சிம்பு படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்து பேசிய வெற்றிமாறன்

 

இந்தப் படம் வடசென்னை பின்னணியில் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் வட சென்னை 2 பட அப்டேட் கேட்க அந்தப் படம், 2026 ஆம் ஆண்டு உருவாகவிருப்பதாக தனுஷ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?