அந்த படத்திற்காக ஜி.வி. பிரகாஷிற்கு இன்னும் ஒரு ரூபா கூட சம்பளம் கொடுக்கல – வெற்றிமாறன் ஓபன் டாக்!

Vetrimaaran About GV.Prakash Kumars Salary: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன். இவரின் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் வெளியாக காத்திருக்கும் படம்தான் மாக்ஸ். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ் சம்பளம் வாங்காமல் இசையமைத்துக்கொடுத்த படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

அந்த படத்திற்காக ஜி.வி. பிரகாஷிற்கு இன்னும் ஒரு ரூபா கூட சம்பளம் கொடுக்கல - வெற்றிமாறன் ஓபன் டாக்!

வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ்

Published: 

22 Nov 2025 21:03 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் வெற்றிமாறன் (Vetri Maaran). தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தற்போது, அரசன் (Arasan)என்ற திரைப்படமானது உருவாகிவருகிறது. இதில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் தயாரிப்பில் வெளியாக காத்திருக்கும் படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்க, கவின் ராஜ் (Kavin raj) மற்றும் ஆண்ட்ரியா ஜெரோமையா (Andrea Jeremiah) இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் , இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் (G.V.Prakash) தனக்காக சம்பளம் வாங்காமல் இசையமைத்துக்கொடுத்த படம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது வைரலாகிவருகிறது

இதையும் படிங்க: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?

ஜிவி. பிரகாஷ் குறித்து பெருமையாக பேசிய வெற்றிமாறன்:

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன், ” இந்த மாஸ்க் படம் உருவாகும்போதே நினைத்தேன், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று, ஆனால் இது சிறிய படம் என்பதால யோசித்தேன். அவரிடமும் கவினுக்கு கதை சொன்னதுபோல, ஜிவி பிரகாஷிற்கும் இப்படத்தில் இருக்கும் முக்கியமான காட்சிங்கள் குறித்து தெரிவித்திருந்தேன். அதன் பின் இந்த படத்திற்கு அவர் இசையமைப்பதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் நானும் அவரிடம் கேட்டுக்கொண்டதால் அவர் இந்த படத்திற்கு இசையமைத்து தருகிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அந்த படம் எனக்கு அளவவு பெரிய வெற்றியை கொடுக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை- விஜய் சேதுபதி!

மேலும் அதற்கு தொகுப்பாளர் ஜிவி. பிரகாஷிடம் “நீங்க சின்ன படம் எல்லாம் பண்ணமாட்டிங்களா என கேள்வி கேட்டார்?” அதற்கு ஜி.வி. பிரகாஷ், “அப்படியெல்லாம் இல்லை” என தெரிவித்தார். தொடர்ந்த பேசிய வெற்றிமாறன், “சின்ன படம் என்றாலும் ஜிவி பிரகாஷிற்கு குறைந்தளவாவது சம்பளம் கொடுக்கவேண்டும் இல்லையா, ஆனால் நான் இன்னும் இந்த படத்திற்கு சம்பளம் கொடுக்கவில்லை அது வேறு விஷயம். மேலும் இவர் விசாரணை படத்திற்காக என்னிடம் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை. அந்த படத்தில் நடித்த நடிகர்களும் சம்பளம் பெறவில்லை” என அதில் தெரிவித்திருந்தார்.

ஜி.வி. பிரகாஷ் மாஸ்க் படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவு

இந்த மாஸ்க் படமானது கொள்ளை, காதல், மற்றும் வித்தியாசமான ஜானரில் தயாரான நிலையில், திரையரங்குகளில் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மேலும் இந்த வார விடுமுறையில் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி, ரூ.7 கோடி கொள்ளை.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இதய நோய் முதல் உயர் ரத்த அழுத்தம் வரை அனைத்தையும் தடுக்கும் ஒரு ஜூஸ் - என்ன தெரியுமா?
இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!